பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரையியல் § woosanocozo: மையின் இது, செய்யுளியலோடு இயைபுடைத்தாயிற்று. ... ... ... வழக்குஞ்செய்யுளும் என்று இரண்டுமல்லாத நூலிற்கும் ஈண்டு மரபுணர்த்தினமையின் இது செய்யுயளிலின் பின் வைக்கப்பட்டது. சொல்லோத்தினுள் கூறிய மரபும், மரபியலுள் உரைப்பனவும் ஆகிய அவை வழக்கிற்கும் செய்யுட்கும் பொது. (செய்யுளியலுட் கூறப்படும்) இது செய்யுட்கேயுரித்து.

  • மரபு என்னும் இச்சொல், இலக்கணம் என்ற பொருளி லும் தொன்று தொட்டுப் பொருட்குரியனவாய் வழங்கிவரும் சொல் மரபு என்ற பொருளிலும் நெடுங்காலமாக வழங்கி வரு 深、 Q笠 ويوجيني بی، ، ، ، و با கின்றது.

" எப்பொருள் எச்சொலின் எல்லா றுயர்ந்தோர் \。ダ 9'-ಣ! செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே' (நன்னூல்-பொதுவியல் 37) எனவரும் நூற்பா, மரபாவது இதுவென்பதனை நன்கு புலப் படுத்துவதாகும். மரபு என்னும் சொல் உயர்தினை நான்கு சாதியையும் குறித்து வழங்குதல் தொல்காப்பியனார் காலத்திற்கு மிகமிகப் பிற்பட்ட வழக்காகும். மரபியலில் மரபு என்ற சொல்லால் வழங்கப்படுவன இருதினைப் பொருட்குணனாகிய இளமை ஆண்மை பெண்மையென்பன பற்றி நெடுங்காலமாக வழங்கிவரும் சொற்பொருள் மரபுகளேயெனக் கொள்ளுதல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்குப் பெரிதும் ஏற்புடைய தாகும். . முதற்குத்திரம் இளமைப் பெயராமாறு கூறுகின்றது. (இ-ஸ்) விலக்குதற்கு அரிய சிறப்பினையுடைய மரபுச் சொற்களின் இலக்கணங்களைக் கூறுமிடத்து பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மிகவு, மறி, குழவி என வரும் ஒன்பதும் இளமைப்பண்பு பற்றிய மரபுப் பெயர்களாம் எ-று. 'குழவியொடு ஒன்பதும் இளைமைப் பெயரே'என இயைத்துப் பொருள்கொள்க. இப்பெயர்கள் தொன்று தொட்டு வழங்கும் மரபுப் பெயர்களாதலின் இவை எவ்வாற்றானும் மாற்றி வழங்கப் படா என்பது அறிவுறுத்துவார் மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்றார். - (க)