பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖鲁曼 தொல்காப்பியம் பாடாண்டிணைத் துறைப்பெயரென்னாது, கிழமைப் பெயரென்ற தென்னையெனின், - அவை, ஐந்திணைப்பெயராகி வகங்காலும் அவர்க்குரியவல்லவென்றற்கு: எனவே, அரசர்க் காயின் இவையெல்லாம் உரியவென்பவாயிற்று. மற்றுப் பாடாண்டிணைக்குரியவல்லவென மற்றைத்திணைக் கிழமைப்பெயர் உரியவாம் பிறவெனின், - அஃது, ' இடையிரு வகையோ ரல்லது நாடிற் படைவகை பெறாஅர் ’’’ (தொல்-மர-76) என மேற்கூறி விலக்குமென்பது. ஆய்வுரை : அந்தணாளர்க்குரியன சில அரசர்க்கும் உரிய எனக் கூறக் கேட்ட மாணாக்கன், 'அரசர்க்குரியனவும் அந்தணர்க்கு உள் ளனலோ என ஐயுறாமைக்காப்பது இச்சூத்திரமாதலின் இஃது ஐயம் அறுத்தது எனக் கருத்துரை வரைந்தார் பேராசிரியர், (இ-ள்) பரிசில் சுடாநிலையும்,பரிசில் விடையும்போல்வனவும் பாடாண்திணைக்குரிய கைக்கிளைப் பொருள்பற்றியும் கொடைத் தொழில்பற்றியும் பெறும் பெயர்களும் நெடுந்தகை செம்மல் முத லாயினவும் பொருந்தக் கூறுதல் அவ்வந்தணாளர்க்குரியதன்று எ-று. நெடுந்தகை செம்மல் என்பன முதலாயினவும் இவை போல்வன பிறவும் புனைந்துரை வகையாற் கூறினல்லது சாதி வகையாற் கூறுதல் அந்தணர்க்கு உரித்தன்று' எனவும், பரிசில் பாடாண்டிணைக் கிழமைப் பெயர் என்றதனால் அவை ஐந் திணைப் பெயராகி வருங்காலும் அவர்க்கு உரியவல்ல எனவும் கூறுவர் பேராசிரியர். 1. பாடாண்திணைத் துறைப்பெயர் என்று கூறாமல் பாடாண் திணைக் கிழமைப் பெயர் என்றதனால் அகன் ஐந்தினைத் தலைவராகி வருதலும் அந்தணர்க்கு இல்லை என்பதாம். 2. 'இடையிரு வகையோ ரல்லது நாடிற் படைவகை பெறார் ' (மரபியல் - 7) என்றமையால் பார்ப்பார்க்குப் படைதாங்கிப் போர்புரியும் புறத்திணை யொழுகலாறும் இல்லை என்றாராயிற்று.