பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் # 09 இஃதொக்கும். இவை விகாரமெனவும் எடுத்தோதிய வருணங் கட்கே இஃதியல்பெனவுங் கொள்க. ஆய்வுரை : இது, போர்த்தொழிற்குரிய படைப்பகுதி பெறாதார் இன்னின்னார் என்கின்றது. (இ-ன்) அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் எனக்கூறப்படும் நால்வகை வருணத்தாருள் இடையில் வைத்து எண்ணப்படும் அரசரும் வணிகரும் அல்லது, அவர்க்கு முன்னும் பின்னும் வைத்து எண்ணப்படும் அந்தணரும் வேளாளரும் போர்க் கருவியாகிய படைப்பகுதியினைப் பெற்றவராகக் கூறப்பெறார் எ-று. (என்) எ. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. இளம்பூரணம் : (இ-ள்) வைசிகன் வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் என்றவாறு பேராசிரியம்: இது, வணிகர் மரபு கூறுகின்றது. (இ~ள்) வணிகர்க்குத் தொழிலாகிய வாணிகவாழ்க்கை உள்ளுறையாகச் செய்யுள் செய்தல் பெரும்பான்மையுமாம் (எ-று). அவையும் அவர்செய்யுளிற் காணப்படுமாறு அறிந்துகொள்க: ஆய்வுரை: இது, வணிகர்க்குரிய வாழ்வியல் கூறுகின்றது. (இ-ள்) வைசிகன் வணிகத்தொழில் புரிந்து வாழும் வாழ்க் கையைப் பெறுவான் எ-று வைசிகன்-வணிகன் வணிகரைக் குறித்த வைசிகன் என்னும் இவ்வடமொழிச் சொல் பழைய தமிழ் நூல்களிற் காணப்பட வில்லை. - (எ வு) 1. வைசிகன்’ என்ற இச்சொல் சங்க காலத்திலும், அதற்கு முன்னரும் தமிழகத்தில் வழங்காத பிற்கால ஆரியச் சொல் வழக்காகும்.