பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் # 13 அக. வேளாண் மாந்தர்க் குழுது ணல்லது இல்லென மொழிய பிறவகை நிகழ்ச்சி. இளம்பூரணம் : (இ-ள்) என்றது வேளாண் மாந்தர் க்குத் தொழில் உழவே என்றவாறு. இது, வேளாண் மாந்தர்க்குக் கூறப்படுந் தொழில் கூறு கின்றது. (இபள்) வேளாண்மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழுந்தொழிலே பெரும்பான்மைத்தாகலான் அதனையே சிறப் பித்துச் சொல்லுதன் மரபு (எ-று).

  • உழுதுண்டு வாழ்வார்’ (குறள் ; 1033) என்பது, இதன் பொருளாயிற்று. மற்றுப் பார்ப்பியன் முதலாகிய நால்வகைத் தொழிலும் வாகையுட் கூறினமையின் இச்சூத்திரமும் மேலைச் சூத்திரங்களும் மிகையாம் பிறவெனின், அற்றன்று; பார்ப்பியலும் அரசியலும் வாணிகத்தொழிலுமாகிப் பொதுப்பட நின்ற ஒதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பின வாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத்தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமு மென்பன அவற்றின் ஒத்த சிறப்பினவன்றி அவற்றுள்ளும் ஒரோ வென்று ஒரோவருணத்தார்க்கு உரியவாமாகலானும் ஈண்டு அவை
  • வேளாண் மாந்தர்க்கு உழுது உண்ணுதல் அல்லது பிற வகை நிகழ்ச்சியில்லை யெனவே வேளாளர் பிறரைத் தொழுது அடிமைத் தொழில் செய்யார் என்பதும் உடன் கூறியவாறு"

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர்' (திருக்குறள் - 1033) என்றார் தெய்வப் புலவரும். 1. பார்ப்பியல் முதலாகிய நால்வகைத் தொழிலும், புறத்திணை யியல் வாகைத்திணையிற் கூறினமையால், இம்மரபியலில் நால்வகை வருணத்தாரைப் பற்றிய சூத்திரங்கள் மிகையாகும் அல்லவா? என்பது இங்குக் கேட்கப்படும் வினாவாகும்.