பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鳢慧唱 தொல்காப்பியம் விதந்து கூறினானென்பது. நிரைகாவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்குந் தடுமாறுதல் போலாது வாணிக வாழ்க்கை வேளாண் மாந்தர்க்குச் சிறுவரவிற்றெனவும், உழு துண்டல் வணிகர்க்குச் சிறுவரவிற்றெனவும், எண்வகைக் கூலத் தோடு பட்டதே பெருவரவிற்றெனவுங் கூறினான்; இச்சூத்திரங் களானென்பது.2 இதனது பயம்;புலனெறிவழக்கினுள் இவர்க்கு இவை சிறந்த மரபென்றலாயிற்று. ஆய்வுரை : இது வேளாண் மாந்தர்க்குரிய தொழில் கூறுகின்றது. (இ-ஸ்) வேளாண் மாந்தர்க்கு உழவுத்தொழிலைச் செய்து உலகமக்களுக்கு உணவினை விளைவித்தலன்றிப் பிறவகைத் தொழில்கள் இல்லையென்று கூறுவர் அறிஞர் எ-று. வேளாண் மாந்தர் நிலத்தை உழுது பயிரிடும் நிலக்கிழார் . நிலவுடைமையாளராகிய இவர்கள் உலகோரது பசிநோயினைத் தணிவிக்கும் தன்னுரிமைத் தொழிலாகிய உழவினையன்றிப் பிற தொழில்களில் ஈடுபடுதல் அறமாகாது என வற்புறுத்தும் முறை 1. பார்ப்பியல், அரசியல், வாணிகத் தொழிலுமாகி மூன்று வருணத்தார்க்கும் பொதுப்பட நின்ற ஓதல், வேட்டல், ஈதல் என்பன இம்மூவர்க்கும் ஒத்த சிறப்பின எனவும், வேளாளர்க் கும் வணிகர்க்கும் உரிய நிரைகாத்தலும் வாணிகமும் ஒத்தன சிறப்பினவாகாமல் ஒரோவொன்று ஒரோ வருணத்தார்க்கு உரியனவாம் ஆதலானும், இம்மரபியலில் அவற்றை ஆசிரியர் விதந்து கூறினார் என்பது மேற்குறித்த வினாவுக்குப் பேரா சிரியர் தரும் விடையாகும். 2. நிரைகாவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க் கும் உரியவாய் வருதல் போலாது, வாணிக வாழ்க்கை வேளாளர்க்கும் உழுதுண்டல் வணிகர்க்கும் சிறுபான்மை யாய் வரும் எனவும் எண்வகைக் கூலங்களை விற்றலே வணிகர்க்குப் பெரும்பான்மையாய் வரும் எனவும் இச் சூத்திரங்களால் ஆசிரியர் கூறினார் என்பர் பேராசிரியர், நால்வகை வருணப் பாகுபாட்டினை அடியொற்றியுரை யெழுதியபேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தமிழகச் சமுதாய நிலையை அடியொற்றியுரை கூறுமிடத்து வணிகரையும் வேளாண் மாந்தரையும் ஒத்த இனத்தவராகவே குறிப்பிட் டுள்ளமை இங்குக் கூர்ந்து நோக்கத் தகுவதாகும்.