பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபி யில் # # 5 யில் அமைந்தது இச்சூத்திரமாகும். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' (திருக்குறள்-1033) என்றார் திருவள்ளுவரும். (அடிக) அ2 வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே. இளம்பூரணம் : எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்) வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினானே படையுங் கண்ணியும் வேளாண்மாந்தர்க்கும்1 உளதாகு மென்றவாறு. இது, நான்காம் வருணத்தார்க்கோர் புறனடை, (இபள்) வேந்தர் கொடுப்பின் வேளாண்மாந்தர்க்குப் படைக்கலமுங் கண்ணியும் பெறும்பொருளாகச் சொல்லப்படும்2 (எ-று). வேந்து விடுதொழி'லென்பது, வேந்தனாற் கொடுக்கப் படுந் தண்டத் தலைமையாகிய சிறப்புக்காரணத்தா னென்ற வாறு; அகத்திணையியலுள், 'உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான’’ என்புழிக் கூறப்பட்டதெனின், வேளாளரை யொழித்து ஒழிந் தோரை நோக்கிற்று அச்சூத்திரமென்பது.3 1. வேந்து விடு தொழிலால் படையும் சண்ணியும் வேளாண் மாந் தர் பெறுவர் என விதிக்கும் இச்சூத்திரம் முன்னுள்ள எள-ஆம் சூத்திரத்தோடு முரண்படுதல் காண்க. இவ்வியல் அச-ஆம் நூற்பாவிலேயே இச்சூத்திர விதி அடங்கியுள்ளமை காண்க. 2. வேளாண் மாந்தர்க்குப் படையும் கண்ணியும் விதிக்கும் இச் சூத்திரம், இடையிருவகையோரல்லதை நாடிற், படைவகை பெறாஅர் என்மனார் புலவர் (மரபியல்-எஎ ) என முன்னர்க் கூறிய சூத்திரத்திற்கு முரணாக அமைந்துள்ளமை காணலாம். 3. உயர்ந்தோர்க் குரிய ஒத்தினான’ (தொல் - அகத் - 34) என வரும் அகத்திணையியற் சூத்திரத்திற்குமுன் நால்வகை வருணப் பாகுபாடு கூறப்படாமையின், 'வேளாளரை ஒழித்து ஒழிந்தோரை நோக்கிற்று அச்சூத்திரம்' எனப் பேராசிரியர் கூறும் கூற்று ஏற்புடையதாகத் தோன்றவில்லை,