பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களைத் தின்ற மன்னவர்க்குப் பின்னை மறையோரான் அரசு தோற்றப்பட்டாற்போலக் கொள்க.) ஆய்வுரை : இதுவும் அது. (இ-ன்) அந்தணாளர்க்கு அரசாளும் உரிமை விலக்கத் தக்கதன்று எ-று. 'அஃதாவது மந்திரி புரோகிதனாகியவழிக் கொடியும் குடையும் கவரியும் தாரும் முதலாயின அரசராற் பெற்று அவ ரோடு ஒருதலைமையராகி யிருத்தல்' எனபர் இளம்பூரணர். (அக) அச. வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும் தாரும் ஆரமுந்2 தேரு மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்3 சூரிய. இளம்பூரணம்: (இ-ள்) வில்லு முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் மன்னனாற்பெற்ற மரபினால் வைசிகர்க்கும் வேளாளர்க்கு முரிய என்றவாறு. 1. சூரிய வமிசத்துப் பிறந்த மித்செகன் என்னும் கல்மாஷபாதன் புதல்வரை இழந்த பின்னர் வடநாட்டில் அந்தணரால் அரசு தோற்றுவிக்கப்பட்டது' என்பதனை இவ்வுரைத் தொடர் உணர்த்துகின்றதோ என ஐயுற வேண்டியுளது. 2. ஆரம் என்றது, பொன்னினும் முத்தினும் மணியினும் இயன்ற மாலையினை. 3. ஏனோர் என்றது வணிகரையும் வேளாளரையும் என இளம் பூரணர் கூறும் இவ்வுரை பொருத்தமுடையதாகத் தோன்ற வில்லை. மன் பெறுமரபின் ஏனோர் என்றது குறுநில மன்னரை எனப் பேராசிரியர் கூறும் உரையே பொருத்த முடையதாகும் என்பது 'தன்னொடு சிவணிய ஏனோர்: (அகத்திணையியல் உr) மேவிய சிறப்பின் ஏனோர்’ (கல்) எனவரும் தொல்காப்பியத் தொடர்களால் நன்கு தெளியப் படும்.