பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 鱷23 'மாவென மடலு மூர் ப’’ (குறுந் : 17) எனவும், 'துகடபு காட்சியவையத்தா ரோலை’ (கலி ; 94) எனவும் வரும். ஒழிந்தனவுங் கொள்க. 'வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க’ (பத்துப்-நெடுதல் : 22) என்பதும் அது. நேர்ந்தன பிறவும் என்பது கேட்டாரை உடம்படுவிப் பன பிறவுமென்றவாறு. 'வண்கோட் பெண்ணை வளர்ந்த நுங்கின்' (சிறுபாண்: 27) எனவும், 'பனை நுகும் பன்ன சினைமுதிர் வராலொடு' (புறம் : 249) எனவும் வரும். பிறவும் அன்ன. ஆய்வுரை : இது, புறத்தே வயிரமுடைய தாவர உறுப்புகளின் மரபுப் பெயர்களைத் தொகுத்து கூறுகின்றது. (இபள்) தோடு, மடல், ஒலை,ஏடு, இதழ்,பாளை,ஈர்க்கு,குலை எனக் கூறப்பட்ட உறுப்பின் பெயர்களும் இவற்றையொத்தன பிறவும் புல்' என்ற வகையைச் சார்ந்துவரும் எனக்கூறினர் புலவர் எ-று. புறத்திண்மையும் அகத்திண்மையும் இல்லாதவற்றுள் வாழை,ஈந்து, தாமரை,கழுநீர் முதலியன ஒருசாரன இவ்வகைப் பட்ட உறுப்புகளின் பெயர்களையுடையவாகிப் புல்” என்றவகை யில் சேர்த்துரைக்கப்படுவன என்பது இளம்பூரணர் கருத்தாகும். நேர்ந்தன. பிறவும் என்றதனால், குரும்பை, துங்கு, நுகும்பு, போந்தை யென்றற் றொடக்கத்தனவும் புல்லின் உறுப்பாகக் கொள்ளப்படும். நுகும்பு-மடல் விரியாதகுருத்து. (புறநா-249). போந்தை-கருக்கு., மூக்கறு நுங்கின்' என்பது தகடூர்யாத்திரை. . (அவு)