பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் y


2CESSERRಙRP

இவற்றை வரையறை கூறும்வழி (டுவுக-சுoடு) உதாரணங் காட்டுதும். 'யாத்த ஆண்பாற்பெயர் ' என்றதனாற் போத் தென்பது இளைமைப் பெயராமாயினும் இங்ஙனம் ஆண்பாற்குச் சிறந்து வருமாறுபோலச் சிறவாது அதற்கென்பது கொள்க." ஆய்வுரை : இஃது ஆண்மைப் பெயராமாறு கூறுகின்றது. (இ-ன்) ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்னும் பதினைந்தும் பிறவும் ஆண்மை பற்றிய மரபுப் பெயர்கள் என்பர் ஆசிரியர் எ-று. பிறவும் என்றதனால், ஆண், விடை, கிடாய் என வருவன போல்வனவும் ஆண்மைப் பெயராகக் கொள்ளப்படும். இச்சூத்திரத்திற் கூறப்பட்ட போத்து என்பது இளமை குறித்த மரபுப் பெயராக வழங்கப்பெறினும் ஆண்பாற்குச் சிறந்து வருமாறு போன்று இளமைக்குச் சிறந்து வராது என்பர் பேராசிரியர். (2.) ந. பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகுங் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பினவும் அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே. இளம்பூரணம் : இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் பெண்பாற் பெயர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : இக்கூறப்பட்ட பதின்மூன்றும் பெண்பாற் பெயராம் என்றவாறு.2 - 1. இங்கு ஆண்மைற்றிெய மரபுப் பெயர்களுள் ఇతDT எடுத்துரைக்கப்பட்ட போத்து என்பது சில விடங்களில் இளமை குறித்த பெயராகவும் வழங்குமாயினும் ஆண்மைக்குச் சிறந்து வருமாறுபோல இளமைக்கு அத்துணைச் சிறந்து வருதல் இல்லை. 2. அந்தஞ் சான்றவென்பது வழக்கின்கண் முடியவமைத்ததென்ற வாறு. உ.வே.