பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 選27 தாழை பூவுடைத் தாகலானும் கோடுடைத் தாகலானும் புறவயிர்ப் பின்மையானும் மரமெனப்படு மாயினும் புல் என்றல் பெரும்பான்மை. இது மேற்கூறிய இரண்டற்கும் பொதுவுறுப்புணர்த்துதல் நுதலிற்று' (இ-ன்) : இவையும் அவ்விருதிறத்தோடொக்கும் (எ று): உதாரணம் : தெங்கங்காய் கமுகங்காய் எனவும், வேப்பங் காய் மருதங்காய் எனவுங், காயென்பது அவ்விரண்டற்கும் வந்தது. பழமென்பதற்கும் இஃதொக்கும். பனந்தோல் வேப்பந் தோல், பனஞ்செதிள் வேப்பஞ்செதிள், தாழைவீழ் இத்திவீழ் என இவையும் இருபாற்குமுரியவாயின. மற்று இவையெல்லாம் வரையறையின்றிச் செல்லுமாயிற் புறக்காழன அகக்காழனவென வரையறுத்துப் பயந்ததென்னை யெனின் அவ்விருபகுதியுள் அடங்கக் கூறியவெல்லாம் புல்லென வும் மரமெனவும் படாவென்றற்கும் அவற்றுறுப்பு ஒதியவாற் றாற் புல்லின் கண்ணும் மரத்தின் கண்ணும் பெருவரவினவா மென்றற்குமென்பது. ஆய்வுரை : இது, புல்மரம் என்னும் இருவகைத்தாவரங்கட்கும் பொது வாக வழங்கும் உறுப்புக்களின் மரபுப்பெயர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) : காய், பழம், தோல், செதிள், வீழ் என்பன புல்லும் மரமும் ஆகிய இருவகைத் தாவரங்கட்கும் பொதுமையின் உரியனவாகும் எ-று. தாழை பூவுடைத்தாகலானும் கோடுடைத்தாகலானும் புறவயிர்ப்பின்மையானும் மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை' என்றார் இளம்பூரணர். (கூo) 1. புல், மரம் என்பவற்றின் உறுப்பு ஒதியவாற்றால் இவை புல்லின்கண்ணும் மரத்தின்கண்ணும் பெருவரவினவாய் வருதலில் இவ்வுறுப்புக்கள் புல், மரம் என்னும் அவ்விரண் டற்கும் பொதுவென்பதாம்.