பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 129 மிகையெனின், ஒக்கும். குழவி என்பது உயர் திணைக்கண் வரின் அதற்குரிய பாலாற் கூறாது அஃறிணைக்குரிய பாலாற் கூறப் படுதலின் அவ்வகையான் வருவன வழுவாயினும் திரிபில்சொல் என்றதனான் இதுவும் அடக்கிக் கூறினார். பேராசிரியம் : இஃது, உலகிலெல்லாம் மரபிற்றிரியாமையின் அதன் சிறப் புணர்த்தி அதற்குக் காரணமுங் கூறுகின்றது. (இ-ள்) நிலனுந் தீயும் நீருங் காற்றும் ஆகாயமுமென்னும் ஐம்பெரும் பூதமுங் கலந்த கலவையல்லது உலகமென்பது பிறி தில்லாமையின் அவற்றைச் சொல்லுமாறு சொல்லாது இரு திணைப்பொருளென வேறுபடுத்தும் ஐம்பாலென வேறுபடுத்தும் வழங்குகின்ற வழக்கெல்லாம் மரபில் திரியாதசொல்லொடு தழி.இ. வரல்வேண்டும் (எ-று). - இதன் கருத்து: 'நிலம்வலிது, தீவெய்து, நீர் தண்ணென்றது, வளியெறிந்தது, விசும்பு அகலியது” என அஃறிணைவழக்கினவாயினும் இவை கலந்த வழியும் அவ் வாய்பாட்டான் வழங்காது உயர்திணை வாய்பாடு வேறாகவும்: அஃறிணை வாய்பாடு வேறாகவும் அவைதம்முட் பகுதியாகிய ஐந்துபாற்சொல்லும் வெவ்வேறாகவும் வழங்குகின்ற வழக்கிற்குக் காரணம் மரபல்லது பிறிதில்லை யென்றவாறு; எனவே, மரபினை வலியுறுத்தவாறு, மற்று, நிலம் நீர் தீ வளி ஆகாயமென ஒன்று ஒன்றனுள் அடங்குமுறையாற் கூறுதல் செய்யாது மயங்கக் கூறியதென்னை யெனின்,-அவை கலக்குங்கால் ஒரோபொருளின் கண்ணும் அம்முறையானே நிற்குங்கொலென்று கருதினுங் கருதற்க; மயங்கிநிற்குமென்றற்கு அவ்வாறு கூறினானென்பது. 1. நிலம் நீர் தீ வளி விசும்பு என அவை ஒன்றினுள் ஒன்று அடங்குமுறையிற்கூறாது, நிலந்தீ நீர்வளி விசும்போடைந் தும் என மயங்ககூறியது, ஐம்பெரும் பூதங்களாகிய அவை தனித்தனியே பிரிந்து நிற்றலின்றி ஒவ்வொரு பொருளினும் மயங்கிக் கலந்து நிற்கும் என்பது அறிவித்தற்கு என்பது பேராசிரியர் கருத்தாகும்.