பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தொல்காப்பியம் பொருளுரித்தெனவும், இணைப்பகுதியாற் பெயர்பெறுமெனவும் மரபுபற்றியே சொல்லப்படுமென்றற்கும், இனி நிறைமொழி மாந்தர் மறைமொழி போல்வன சிலமிறைக் கவி பாடினாருள ரென்பதே பற்றி அல்லாதாரும் அவ்வாறு செய்தன் மரபன்றென் றந்கும் இது கூறினானென்பது; அவை; சக்கரஞ், சுழிகுளங், கோமூத்திரிகை, ஏகsாதம் எழுகூற்றிருக்கை, மாலைமாற்று என்றாற்போல்வன. இவை மந்திர வகையானன்றி வாளாது மக்களைச் செய்யுள் செய்வார்க்கு அகனைந்தினை க்கும் மரபன் றென்பது கருத்து. அல்லாதார் வற்றை எல்லார்க்குஞ் செய்தற் குரியவென இழியக்கருதி அன்ன வகையான் வேறு சில பெய்து கொண்டு அவற்றிற்கும் இலக்கண சொல்லுப. அவை இத் துணையென்று வரையறுக்கலாகா என்னை? 'ஒற்றை இரட்டை புத்தி வித்தார” மென்றாற்போல் வன பலவுங் கட்டிக்கொண்டு அவற்றானே செய்யுள் செய்யினுங் கடியலாகாமையின், அவற் 3. - a. # וא - s றிற்கு வரையறைவகையான் இலக்கணங் கூறலாகாவென்பது,2 " ஐயைதன் கையு ளிரண்டொழித்தெ னைம்பான்மேற் பெய்தார் பிரிவுரைத்து வில்லையால்' எனவுங், ' கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை யாடா வடகினுளுங் காணேன்' (தினை நூற் : 4) 1. மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், கோமூத்திரிகை என்றாற் போல்வன மந்திரவகையால் தெய்லத்தைப் பரவிப் போற்றும் மிறைக்கவிகள் ஆகும். இவை மக்களைக் குறித்துச் செய்யுள் செய்வார்க்கும் அகனைந்திணைக்கும் உரியவா.கா. இத்தகைய மிறைக்கவிகள் எல்லோரையும் பாடுதற்குரியன என்று கொண்டு, இவற்றுடன் வேறுபலவற்றையும் சேர்த்து சித்திரங் களாக்கி இலக்கணம் கூறுவர் பிற்காலத்து வடநூல்வழித் தமிழாசிரியர். (யாப்பருங்கலவிருத்தி, ஒழிபியல் -ஆம் சூத்திரவுரை) 2. சித்திரக்கவிகள் எனப்படும் இவற்றை இவ்வளவின என்று வரையறுக்கலாகாமையானும் இவர்கள் கூறிய இவற்றோடு ஒற்றை, இரட்டை, புத்தி, வித்தாரம் என்றாற்போல மேலும் பல கூட்டிக்கொண்டு செய்யுள் செய்யினும் அவற்றை விலக்குத லியலாமையானும் ஓர் வரையறையுளடங்காத இவற்றிற்கு இலக்கணம் கூறார் ஆசிரியர் என்பது பேராசிரியர் கருத்தாகும். ד", " ;)