உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் # 33 எனவுஞ் சொல்லுவார் சொ ல்லுவனவற்றுக்கெல்லாம் வரையறை யின்மையின், அவற்றுக்கு இலக்கணங் கூறார் பண்ணத்திப்பாற் (492) படுப்பினல்லதென்பது. ஆய்வுரை : இது, செய்யுளிலும் மரபுச்சொற்கள் வழுவாது அமைதல் வேண்டும் என வற்புறுத்துகின்றது. - (இ-ள்) : இங்குக் கூறப்பட்ட மரபுநிலையிற் பிறழ்ந்து வருதல் செய்யுட்கு இல்லை; உலகியல் மரபினை அடியொற்றிய කු சொற்களாற் பொருள்களையுணர்த்த வேண்டுதலின் எ-று. செய்யுளுறுப்புகளுள் ஒன்றாகிய மரபு என்பதனைக் குறித்து, ' மரபே தானும் நாற்சொல் லியலான் யாப்பு வழிப்பட்டன்று ' (செய்யுளியல் எசு ) என்றார் தொல்காப்பியனார். அங்குக் குறித்த மரபு என்பது உலகியல் வழக்குப் பற்றியது. அம்மரபு செய்யுளின் உறுப்பாதற் குரிய காரணத்தினை இச்சூத்திரத்தாற் கூறினார் ஆசிரியர் என்பது இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் தரும் விளக்கமாகும். உலகவழக்காவது வரலாற்றுமுறைமை பிறழாது வருதலே தக்க தாதலின், அவ்வழக்கினை அடியொற்றியமைந்த செய்யுட் களும் மேற்குறித்த மரபுநிலையில் திரியாது அமைதல் வேண்டும் என இச்சூத்திரத்தால் ஆசிரியர் வற்புறுத்தினாராயிற்று. (க2) க.ந. மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும். இளம்பூரணம் : (இ-ள்) மரபுநிலை திரிந்துவரிற் பொருள் வேறுவேறாகு மென்றவாறு. எனவே, வழுவென்றவாறாம். பேராசிரியம் : இது, மேற்போன வழக்கிற்குஞ் செய்யுட்கும் வருகின்ற இலக்கணத்திற்கும் பொது, 1. மரபுநிலை திரிதலாலுளதாம் வழுவுணர்த்துகின்றது.