பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தொல்காப்பியம் பேராசிரியம் : (இ-ள்) : கூறப்பட்ட பதின்மூன்று பெயரும் பெண்மைப் பெயர் (எ-து). கடமையென்பதோர் சாதிப்பெயர் உண்டேனும் அதுவன்று, ஈண்டெண்ணப்பட்டது பெண் மை மேற்றென்று கொள்க. அந்தஞ் சான்ற' என்பது, முடிபமைந்தன இவையென்ற வாறு. எனவே, ஆ என்பது பெண் பெயராதலும் பெண் ஆணென்பன ஒருசார் புல்லிற்கும் நேர்தலுங் கொள்க; என்னை? ஆனேறென்பது ஆவினுள் ஏெ றனப்படுதலின், ஆவென்பது ஆண்பாற்கும் பொதுவாகலின், அது முடிபமையாதெனப்பட்டது; அது மேற்காட்டுதும். - . ஆண்மை பெண்மை புல்லிற்கின்மையின் அவையும் முடி புடையன ஆகாவாயினுங், காயாப்பனையை ஆண்பனை யென்றுங்காய்ப்பனவற்றைப் பெண்பனையென்றும் வழங்குப3 இவையெல்லாம் வழக்காகலிற் செய்யுளுள் வருமாறு அறிந்து கொள்ளப்படும். இவற்றுக்குமேல் வரையறை கூறும்வழி (606-22) உதாரணங்காட்டுதும். 1. கடமை என்பது மானினத்துள் ஒரு சாதியைக் குறித்த பெயராகவும் வழங்குதலுண்டு. ஆயினும் இச்சூத்திரத்தில் எடுத்தோதப்பட்டது, பெண்மை பற்றிய மரபுப் பெயரெனக் கொள்க. 2. அந்தம் - முடிபு. அந்தஞ்சான்ற - முடித்துக் கூறப்பட்ட எனவே, இவ்வாறு பெண்மை பற்றிய பெயர் என உறுதியாகக் கூறப்படாத 'ஆ' என்பது ஒருகால் பெண்மைப் பெயராக வழங்கப்பெறுதலும், ஆண், பெண் என்னும் மரபுப் பெயர் கள் புறத்தே வயிரமுடைய புல்லுக்குரியனவாக வழங்கப் பெறுதலும் கொள்ளப்படும். ஆனேறு’ என்பது ஆணினத் துள் ஏறு எனப்பொருள் தருதலின் இங்கு 'ஆ' என்பது @LISಳr670 பற்றிய பெயராகாது பொதுவாகப் பசு’ என்னும் இனம் பற்றிய பெயராக வழங்கப்படுதலின் இப்பெயர் அந்தஞ்சான்ற பெண்பெயராகாமை நன்கு தெளியப்படும். 3. 'ಅಣL யாண்பனை யீன்குலை யோத்துர்’ ஆண்பனையைப் பெண்பனையா கென்னும் எனவரும் வழக்கு நோக்குக.