盖器4 தொல்காப்பியம் (இ-கள்) மரபினை நிலைதிரித்துச் சொல்லுபவெனின், உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து பிறிது பிறிதாகும் (எ-று). செவிப்புலனாய ஓசைகேட்டுக் கட்புலனாய பொருளுணர்வ தெல்லாம் மரபுபற்றாக அல்லது மற்றில்லை யென்றவாறு.1 ஆய்வுரை : இது, மரபுநிலை திரிதலால் உளவாம் வழுவுணர்த்து கின்றது. (இ-ள்) பன்னெடுங் காலமாக உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் தொடர்ந்து நிலைபெற்று வரும் சொற்பொருள் மரபுநிலை திரிந்து வேறுபடுமானால் உலகத்து வழங்கும் சொற் களில் ஒன்றற்குரியன பிறிதொன்றற்குரியனவாய்ப் பொருள் வேறுபட்டுச் சிதைவுறும் (எ-று). (கூக) சு.ச. வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின், ஐயமறுத்தலை துதலிற்று, (இ.ஸ்) வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர் மேலது; நூலின் நிகழ்ச்சி அவர் மாட்டாதலான் என்றவாறு. மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லையெனவும், அதனானே வழக்கிற் சிறுபான்மை வருமெனவும், செய்யுள் மரபு ஒழியவரின் அது வழுவாமெனவும் கூறினராயிற் பாயிரத்துள் 'வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளு நாடி’ என்றதனோடு மாறுகொள்ளு மோவென ஐயுற்றார்க்கு, ஆண்டு 1. செவிப்புலனாகிய ஓசையைக் கேட்டு அது கருவியாகக் கட் புலனாய பொருளையுணர்ந்து கொள்ளுதல் என்பது உல கியலில் வழங்கும் சொல் மரபினைத் துணையாகப் பற்றி யல்லது பிறிதில்லை. எனவே சொல்மரபு நிலை திரியுமாயின் அதனால் உணர்த்தப்படும் பொருளும் வேறுபட்டு நிலை திரியும் என முற்கூறப்பட்ட உலக வழக்கிற்கும் செய்யுள் வழக்கிற்கும், இனிக் கூறும் நூலின் இலக்கணத்திற்கும் பொதுவாயமைந்தது இச்சூத்திரம்,
பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/140
Appearance