பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 135 வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர் வழக்கினை எனவும் இழிந்தோர் வழக்கு வழக்கெனப்படா தெனவும் கூறியவாறு.1 இது, வழக்கினுண் மரபினைப் பிழைத்துக் கூறுவனவும் உளவென்பதுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே என்னை? உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமையின் (எ-று) அவரையே நோக்குதலென்பது அவராணையான் உலக நிகழ்ச்சி செல்கின்றதென்றவாறு? ; எனவே உயர்ந்தோரெனப் படுவார் (569) அந்தணரும் அவர்போலும் அறிவுடையோரு மாயினாரென்பது, ஆய்வுரை : உலகத்துக் கற்றோர் கல்லாதார் என்னும் இருதிறத்தாராலும் வழங்கப்பெறும் வழங்கப் பெற்றுவரும் சொற் பரப்பினுள் எவ ருடைய சொல் வழக்கினை மரபாக ஏற்றுக் கொள்வது? என்னும் ஐயத்தினை நீக்குவது இச்சூத்திரமாதலின், ஐயம் அறுத்தலை நுதலிற்று எனக் கருத்துரை வரைந்தார் இளம்பூரணர். (இ-ன்) உலக நிகழ்ச்சிகள் எல்லாம் (பொருள் வெளிப் பாட்டுக்குக் கருவியாகிய மொழியினைக் கற்று) உயர்ந்த பெரி யோர் வழங்கும் சொற்பொருளமைப்பாகிய வழக்கினைச் சார்பாகக் கொண்டு நிகழ்தலால், செய்யுட்கு அடிப்படையா யுள்ள உலக வழக்கு எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது கல்வி யறிவினாலுயர்ந்த உயர்ந்தோர் வழக்கேயாகும் (எ-று). இங்கு, உயர்ந்தோர் என்றது, பொருள் புலப்பாட்டிற்குக் கருவியாகிய வழக்கும் செய்யுளும் என்னும் இருவகை மொழி வழக்கினையும் குற்றந்திரக் கற்றுச் சொற்பொருள் ஒழுகலாறு மாறுபடாமல் மொழிவளர்ச்சிக்கும் அதன்வழி நடைபெறும் உலகியல் மரபாவது இதுவென உணர்த்துகின்றது. 2, உலக நிகழ்ச்சிகள் யாவும் அறிவு திரு ஆற்றல்களால் உயர்ந்த சான்றோரது ஆணையால் நிகழ்வனவாதலின், இங்குக் கூறும் சொற்பொருள் மரபு பற்றிய உலகவழக்கென்பது, அத்தகைய உயர்ந்தோர் வழக்கினையே குறிப்பதாகும் என்பதாம்.