பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 33 தொல்காப்பியம் (இ-ள்) மரபுநிலையில் திரியாமை தமக்குக் குணனாக உடையவாகி எல்லாரானும் உரைக்கப்படும் நூல் இரண்டிலக் கணத்தவாகும்; முதனுTலெனவும், வழி நூலெனவும் கருதிக் கொள்ளும் அடிப்பாட்டான் (எ-று). மரபுநிலை திரியிற் பிறிது பிறி தாகும்’ (தொல்-மர: 91) என்பதனை இதற்குமேல் எய்துவித்தானன்றே அதனான் மரபு நிலை திரியாமையே தமக்குத் தகுதியாவதெனவும் இவ்விருவாற் றானும் ஒன்றனாற் செய்தலே மரபெனவுங் கூறியவாறு. 'நுதலியநெறி (648) யென்றதென்னையெனின்,-இன்னதே முதனூல், இன்னதே வழி நூலென்பதோர் யாப்புறவில்லை; ஒரு நூல்டற்றி ஒருவன் வழிநூல் செய்தவழி அவ் வழிநூல்பற்றிப் பின்னொருகாலத்து ஒருநூல் பிறந்ததாயின் அது வழிநூலெனப் பட்டு முன்னை வழிநூலே முதனுாலெனப்படுமென்றற்கென்பது.1 இதனைச் சார்பு நூலென்னாமோவெனின், வழி நூலுஞ் சார்பு நூலுகாகலின் அங்கனங் கூறானாயினான், எற்றுக்கு சார் பு நூலினைப் பற்றி ஒரு நூல் பிறந்தவழிச் சார் பின் சார்பெனக் கூறல் வேண்டுவதாகலானும் அதனைச் சார்ந்து தோன்றிற் சார் பென் அஞ் சொல்லை மும்முறை சொல்லியும் அதன்பின் தோன்றிய நூற்கு நான்முறை சொல்லியும் எண்ணிகந்தோடுத லானுமென்பது.? 1. ஒரு நூலை முதலாகக் கொண்டு ஒருவன் வழிநூல் செய்யின் அவ்வழிநூல் பற்றிப் பின்னொரு காலத்து ஒருநூல் தோன்றிய தாயில் அங்ங்ணம் தோன்றிய நூல் வழிநூலாகவும் அதற்கு முதலாகவுள்ள வழிநூலே முதல் நூலாகவும் வழங்கப்பெறும் என்றற்கு, துதலிய நெறியின் உரைபடு நூல்த்ாம் முதலும் வழியும் என இருவகை இயல' என்றார் ஆசிரியர். 2. பின் தோன்றிய வழி நூலே தன் முதலாகக்கொண்டு வழி நூற்கு முன்னுள்ள முதல் நூலை நோக்கச் சார்புநூலுமாம் ஆகலின் இன்னதே முதல்நூல், இன்னதே வழிநூல் என்னும் விரையறையின்மையின் சார்புநூல் என்பதோர் வகையினை ஆசிரியர் கூறாராயினார். சார்புநூல் என்பதனை நூலின் வகையாகக் கொண்டால், அதன்வழித் தோன்றிய நூலைச் சார்பிற் சார்பு எனவும், அதன்வழி வந்ததனைச் சார்பிற் சார் பிற் சார்பிற் சார்பு எனவும் இவ்வாறு எண்ணிறந்து செல்லு:மாதலின் அவையெல்லாம் அடங்க முதல்நூல் வழி நூல் என்னும் இருவகையினையே ஆசிரியர் குறிப்பிடுவா ராயினர்.