பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தொல்காப்பியம் மற்றுக் காலந்தோறும் வழக்கு வேறுபடுதலின் வழக்கு நூலும் வேறுபட அமையும்பிற எனின், ! 'வழக்கெனப் படுவ துயர்ந்தோர்மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான' (தொல்-மர 92) என்றமையானும் அங்ங்னம் காலந்தோறும் ஒரோர் நூல் செய் யின் வழக்கல்லது எஞ்ஞான்றும் அவ்விலக்கணத்தாற் பயமின் றாகிய செல்லுமாகலானும் அது பொருந்தாதென்பது. அல்லது உம், ற்காலத்து வழங்கிவந்ததனை வழுவென்று களைபவாயினன்றே பிற்காலத்துப் பிறந்த வழக்கு இலக்கண மெனத் தழிஇக்கொள்வதென்க. இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் வழக்குஞ் செய்யுளு மென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித்தல்லது அவற்றைக் கூறும் இலக்கணங் கூறலாகாமையினென்பது.2 இக் கருத்தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஒத் தென்ப, அல்லது உம் இந்நூலிலக்கணம் வழக்கிற்குஞ் செய்யுட்குமே யன்றி அங்ங்னமாகப் பொருண்மேவும் பண்டம் முதலாய வற்றிற்கு இலக்கணஞ் செய்யுங்காலும் நியாயஞ்செய்யினுந் தமிழ் நூலதற்கிலக்கணம் எவ்வாற்றானும் இதுவே யென்றற்கும் ஈண்டுக் கூறினானென்பது. எனவே, பிறபாடை நூல்களாயின் இம் மரபு வேண்டுவதன்றாயிற்று. மற்று முதனூலினை இன்ன தென்பது துணிந்து உரையாரோவெனின் அதுவன்றே இனிக் கூறுகின்றதென்பது. ஆய்வுரை : இது, மேற் செய்யுளியலில் அடிவரையில் எனப்பட்ட ஆறனுள் நூலுக்குரிய மரபு உணர்த்தத்தொடங்கி நூலின் வகை யுணர்த்துகின்றது. - 1. காலந்தோறும் வழக்கு வேறுபட ஒரோர் நூல் செய்யின் அது நிலையுடைய வழக்காகாது மாறுபடும் அவ்விலக்கணத் தாற் பயனில்லை ஆதலால், 'காலந்தோறும் வழக்கு வேறு படுதலின், வழக்கு நூலும் வேறுபட அமையும்' என்பார் கூற்றுப் பொருந்தாது என்பதாம். - 2. வழக்கும் செய்யுளும் என்று விதந்து கூறத்தொடங்கிய இரண்டின் இலக்கணமும் கூறி முடித்தபின் அவ்விரண்டிலக் கனங்களையும் நூலின் இலக்கணம் கூறவாகாமையின் நூலின் இலக்கணத்தினை மரபியலின் இறுதிக்கண் வைத் தார் ஆசிரியர்.