பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖墨怒 தொல்காப்பியம் இருவர் ஆசிரியர் கூறியவதற்கு உடம்பட்டுவருதலின் அதுவும் வழிநூல் என அடங்கும்” என்றார் இளம்பூரணர். (கடு கசு. வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முணைவன் கண்டது முதனுள் லாகும். இனம்பூரணம் : என்னுதலிற்றோ-எனின் நிறுத்தமுறையானே முத னுனலாமாறு உணர்த்துதல் துதலிற்று. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். பேராசிரியம் : மேல் ஒன்றற்கு முதனூலாகியும் ஒன்றற்கு வழிநூலாகியும் வந்து தடுமாறுமென்றான், இனி அவ்வாறன்றி ஒன்றே முத ஒாலாகவுஞ் சிறுபான்மை உண்டென்கின்றது.8 (இபள்) செய்வினையின் பயன் துவ்வாது மெய்யுணர் வுடையனாகிய முன்னோனாற் செய்யப்பட்டதே ஒருதலையாக முதலுரலாவது (எ-று). எனவே, மேலைச்சூத்திரத்து முதனூலும் வழிநூலுமெனப் பட்டன முதலுஞ் சினையும் போலத் தடுமாறுமென்பது உம் இதுவாயின் தடுமாறாது எஞ்ஞான்றும் முதனுாலாமென்பது உம் பெற்றாம். 1. வினையின் நீங்கிய (பா.வே.) 2. இயல்பாகவே வினைத்தொடர்பினின்றும் நீங்கி எல்லாவற் றையும் தானே உணரும் முற்றறிவுடையவனாகி விளங்கும் இறைவனால் அருளிச் செய்யப் பெற்றதே முதனூல் எனப் படும் என்பது இச்சூத்திரத்தின் பொருள். கண்டது-செய்தது. காணுதல்-செய்தல் 3. மேலைச் சூத்திரத்து முதலும் வழியும் என இருவகைப்படக் கூறப்பட்ட நூல்கள் பின்வந்ததனை நோக்க முதல்நூலாகி யும், முன்னுள்ளதனை நோக்க வழிநூலாகியும் பேசப்படும் இயல்புட்ையன என்பது கூறப்பட்டது. அவ்வாறன்றித் தனக்கு முதல்நூல் என்பது இன்றித் தான் ஒன்றே முதல் நூலாகவும் திகழும் நூல் சிறுபான்மை உண்டு என்பதனை அறிவுறுத்துவது இச்சூத்திரம் என இங்குக் கருத்துரை வரைந் தார் பேராசிரியர்,