பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 9 ஆய்வுரை : இது, பெண்மைப் பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) ; பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பினவு, பிடி எனக்கூறப் பட்ட பதின்மூன்று பெயர்களும் பெண்மை குறித்த மரபுப் பெயர்கள் எ-று. இங்குக் குறித்த கடமை என்னும் பெண்மைப் பெயர் வேறு; விலங்கினத்துள் ஓரினத்தையுணர்த்தும் கடமை யென்னும் சாதிப் பெயர் வேறு எனப் பகுத்துணர்தல் வேண்டும். அந்தம்’ என்பது, அழகு என்னும் பொருளில் வழங்கும் தமிழ்ச்சொல் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும். அந்தஞ்சான்ற பிடி-அழகு நிறைந்த பெண்யானை மாதர் மடப்பிடி’ என்பது சம்பந்தர் தேவாரம். (B) ச. அவற்றுள்,* பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றினமை. இளம்பூரணம் : - என்னுதலிற்றோ எனின் மேல் அதிகரிக்கப்பட்ட மூவகைப் பெயர்க்குஞ் சிறப்பு விதியுடையன இச்சூத்திர முதலாக வருகின்ற சூத்திரங்களாற் கூறப்படுகின்றன. (இ-ஸ்) மேற் சொல்லப்பட்டவற்றுட் பார்ப்பு பிள்ளை யென்னும் இரண்டும் பறவையி னிளமைப் பெயர் என்றவாறு, இவ்வோத்திற் சூத்திரத்தாற் பொருள் விளங்குவனவற்றிற்கு உரையெழுதுகின்றிலம். பேராசிரியம் : இது, நிறுத்த முறையானே இளைமைப்பெயருண் முற்கூறிய பார்ப்பினைக் கூறுவான் அதனோடொப்புமை கண்டு பிள்ளைப் பெயருங் கூறுகின்றது.

  • அவற்றுட் என்பது பேராசிரியர் ւո-ա.

மூவகைப் பெயராவன : இளமைப் பெயர். ஆண்பாற் பெயர் பெண்பாற் பெயர் என்பன.