பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖4颂 தொல்காப்பியம் னின்று ஒருகாலத்து நீங்கினான்போலக் கூறியதென்னையெனின் அற்றன்று வினைப்பயந் தொடரற்பாற்றுள்ளம் இலனென்ப தன்றி அவர்க்குச் சில செய்கையுளவென்பது பல்லோர்க்கும் உடம்பாடாகவின், அவ்வினைக்கணின்றே: போகமும் பாவமும் மெய்யுணர்வு பற்றித் தெறப்பட்ட வித்துப்போலப், பிறப்பில் பெற்றியனாகி நீங்குமாகலின் அவ்வாறு கூறல் அமையுமென்பது என்னை? 'குற்றங் கெடுத்து முற்ற உணர்ந்தோருங், கெடுப்ப தோர் குற்றமின்றி முழுதுணர்ந்தோரும் எல்லாம் பிறர்க்குறுதி யாகிய ஆகமஞ் செய்யினுந் துறக்கம் முதலாகிய பயன் றுய்ப்பா 1 ல்லராகலின். இனி முனைவனாற் செய்யப்படுவதோர் நூலில்லையென் பார் அவன்வழித் தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பாற் பொருள் கேட்டு முதனூல் செய்தாரெனவும், அம்முனைவன் முன்னர் ஆகமத்துப் பிறந்ததோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங் கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல்செய்தார் அவரெனவும், அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து. வழிநூலுஞ் சார்புநூலுமெனப் பலவும் செய்தாரெனவுங் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்த நூலன்மையின் அவை தேறப்படா; அல்லதுTஉம் அவை தமிழ்நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சி யில வென்பது. மற்று, மேலைச்சூத்திரத்து நுதலிய நெறியானே முதலும் வழியுமா மெனவே, எல்லார்க்கும் முதல்வனாயின் செய்தது முத னுாலேயாமென்பது பெறுதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறிய தென்னையெனின்.தாமே தலைவராவாரும், அத்தலைவரை வழிப் பட்டுத் தலைவராயினாரும் பலராகலின் தாமே தலைவராயினார் நூல் செய்யின் முதனுாலாவ தெனின், அற்றன்று; தாமே தலைவ ராயினார் முற்காலத்துத் தமிழ் நூல் செய்தி.லராகலின், தலைவர் வழிநின்றுதலைவனாகிய அகத்தியனாற்செய்யப் பட்டதும் முதனுண்லென்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் 1. இங்ங்ணம் கூறுவோர் கூற்று, வேதம் ஆகமம் என்னும் வட மொழி நூல்களைப் பற்றிய தாதலின், தமிழ் நூல்களைப் பற்றிச் சிந்திக்கும் இவ்விடத்து அவை பற்றிய ஆராய்ச்சி வேண்டற்பாலது அன்று என்பதாம்.