பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# i ö தொல்காப்பீடிம் ஆனாப் பெருமையுடையாரெனவும், அவராற் செய்யப்பட்ட முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதட உணர்ந்தோருள் தலை வராயினார் தொல்காப்பியனாரெனவும், பன்னிருபடலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட்டது. இனிப், பன்னிருபடலம் முதனுாலாக வழிநூல் செய்த வெண் பாமாலை ஐயனா ரிதனாரும் இது கூறினார்: என்னை? மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த” எனப் பாயிரஞ் செய்தற்கு உடன்பட்டமையினென்பது. இவற்றானெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனுள் லென்பது உந், தொல்காப்பியம் அதன் வழிநூலென்பது உம், அது தானும் பனம்பாரனார், "வடவேங்கடந் தென்குமரி” (தொல் : பாயிரம்) எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ்செய்தமை யிற் சகரர் வேள்விக்குதிரை நாடித் தொட்ட கடலகத்துப்பட்டுக் குமரியானும் பனை நாட்டோடு கெடுவதற்கு முன்னையதென் பது உம், அவ்வழக்குநூல் பற்றியல்லது ஈண்டு மூன்று வகைச் சங்கத்தாருஞ் செய்யுள் செய்திலரென்பது உம், ஆசிரியரும் அவர்போல்லாரும் அவர் வழி ஆசிரியருஞ் செய்யுள் செய்த சான்றோருஞ் சொல்லாதன சொல்லப் படாவென்பது உம் அவருடம்படாதன சொல் உளவென்று எதிர்நூலென ஒருவன் பிற்காலத்து நூல்செய்யுமாயின் தமிழ் வழக்கமாகிய மரபினோடுத் தமிழ் நூலோடும் மாறுபட நூல் செய்தானாகுமென்பது உம், இனித் தமிழ்நூலுள்ளுந் தமது மதத்துக்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் செய்துகாட்டினும் அவை முற் காலத்து இலவென்பது முற்கூறி வந்த வகையான் அறியப்படு மென்பது உம், பாட்டுந்தொகையும் அல்லாதன சிலநாட்டிக் கொண்டு மற்று அவையுஞ் சான்றோர் செய்யுளாயின; வழுவில் வழக்கமென்பார் உளராயின் இக்காலத்துள்ளும் ஒருசாரார்க் கல்லது அவர் சான்றோரெனப் படாரென்பது உம் இங்கனங் கட்டளை செய்யவே காலந்தோறும் வேறுபடவந்த