பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.5認 தொல்காப்பியம் தொகுத்தலென்பது முதனூலுள் விரிந்ததனைச் சில்வாழ் நாட் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக்கூறல், விரித்த வென்பது முதனுாவில் தொகுத்துக் கூறுபட்டு விளங்காது நின்ற தனை விளங்குமாற்றான் விரித்துக்கூறல், தொகைவிரியென்பது அவ்விருவாறும்பற்றித் தொகுத்து முன்னிறீஇ அந்நிறுத்த முறை யானே பின் விரித்துக் கூறுதல். மொழிபெயர்த் தென்பது பிற பாடையாற் செய்யப்பட்ட பொருளினைத் தமிழ் நூலாகக் செய்வது. அதுவுந் தமிழநூலுள் வழிநாற்கு மரபாமென்ற வாறு. அதர்ப்படவென்பது, நெறிப்படவென்றவாறு; நெறிப்படு தலென்பது அவ்வாறு மொழிபெயர்த்துச் செய்யுங்கால் அது கிடந்தவாற்றானே செய்யப்படும்; தொகுத்தும் விரித்துந் தொகை விரியாகவுஞ் செய்ததனாற் பயமில்லைத், தமிழாக்கும் ஆரியர்க் குமென்பது. மொழிபெயர்த்தெனவே, பொருள் பிறழாமை பெற்றாம். வழக்கு நூலுள்ளும் மொழி பெயர்த்து யாக்கப்படு வன உளவோலெனின் அற்றன்று; அது வேண்டுமே வேதப் பொருண்மையும் ஆகமப்பொருண்மையும் நியாயநூற். பொருண்மையும் பற்றித் தமிழ்ப்படுக்குங்கால் அவற்றிற்கும் இதுவே இலக்கணமென்றற்கு மொழிபெயர்த்தலையும் இவற்றுக் கட் கூறினானென்பது. - இனிப் படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணமென்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உடி காரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலா கிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்று காறும் உளதாயிற்றெனக் கொள்க.2 1. வேதப்பொருண்மையும் ஆகமப்பொருண்மையும் நியாயநூற் பொருண்மையும் பற்றித் தமிழ் நூல் செய்யுமிடத்து அங் ங்ணம் தமிழ்ப்படுக்கப்படும் நூல்கட்கும் இதுவே இலக் கணம் என்று அறிவித்தற்கு மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலையும் வழிநூல் வகைகளுள் ஒன்றாகக் குறித்தார் ஆசிரியர். - 2. பரந்துபட்ட தமிழியற் பொருண்மையவாகிய மாபுராண ம், பூதபுராணம் முதலிய தமிழிலக்கண நூல்கள் தொல்காப் பியனார் காலத்தோடு ஒத்தகாலத்தில் இயற்றப் பெற்றன வாயினும், அவை சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவின் மாக் கட்கு உபகாரப் படாமையின், எல்லோர்க்கும் எளிதிற் பயன். படுமாறு தொகுத்துச் செய்யப்பட்ட வழக்கு நூலாகிய தொல்காப்பியும் இடைச்சங்க காலம் முதலாக இன்றளவும் மக்களாற் பயிலப்படுவதாயிற்று என்பதாம்.