பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i54 தொல்காப்பியம் பேராசிரியம் : இஃது, எல்லா நூற்கும் ஆவதோர் இலக்கணமுணர்த்து தல் நுதலிற்று. (இ ன்) ஒத்த சூத்திரத்தினை உரை நடாத்தல் வேண்டின வழிப் பிறந்த காண்டிகையும், அக்காண்டிகையானும் விளங்காத காலத்து அதனையும் விளங்கக்கூறும் உரைவிகற்பத்ததுமாகிப், பத்துவகைக் குற்றமுமின்றி, நுண்பொருளவாகிய முப்பத்திருவகை உத்தியோடு பொருந்திவரின் அதனை நூலென்று சொல்லுப நுண்ணித்ன் உணர்ந்துரைக்கும் புலவர் (எ-று). ஒத்த சூத்திர'மென்றதனான் நூலின் வேறாகிய இருவகைப் பாயிரமுஞ் சூத்திரத்தோடு ஒத்த இலக்கணத்தவென்பது கொள்க. உரைப்பி'னென்றதனான், 'உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி' (தொல். செய் : 166) வருதலை நூலிலக்கண மெனச் செய்யுளியலுட் கூறிப் போந்தாம்; அங்ங்னம் வேறாகிப் பொருந்திவருமெனப்பட்ட உரையின்றிச் சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டென்பதாம் 1 இதனது பயம் உரையுங் காண்டிகையுமின்றிச் சூத்திரத் தானே சொற்படுபொருள் உரைத்தலுமுண்டு, அஃது அவற்றை யொழிய ஆகா இக்காலத் தென்றலாயிற்று. உரைப்பினென்னும் வினையெச்சங் கிளத்த'லென்பத னோடு முடியும். வகை யென்றதனான் உரையெனப்பட்டது 1. உள்நின்றகன்ற வுரையொடு பொருந்திவருதலை நூலின் இலக்கணமாகச் செய்யுளியலிற் குறித்தார் தொல்காப்பியர். சூத்திரத்தின் பொருள் விளங்க உரை செய்யுங்காலத்துப் பிறந்த காண்டிகையும் அதனாலும் பொருள் தெளிவுபட விளங்காத காலத்து விரித்துரைக்கப்படும் உரையும் இலக்கண நூலுக்குரிய அங்கங்களாக இச்சூத்திரத்திற் கூறப்பட்டன. இதனால் இங்ங்ணம் நூலுக்கு அங்கமாய் வேறாப் பொருந்தி வரப்பட்ட உரையேயில்லாமல் சூத்திரத்தினாலேயே பொருள் விளங்கிக் கொள்ளும் காலமும் இருந்தது என்பதும் அந் நிலைமை இக்காலத்துக்கு ஏற்புடையதன்று என்பதும் பேராசிரியர் கருத்தாகும்.