பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰领 தொல்காப்பியம் (இ-ள்) : இவ்விரண்டும் புள்ளிளைமைக்குரிய" (எ-று). இவையெல்லாம் இக்காலத்து வழக்கினுள் அரியவாகலிற் சான்றோர் செய்யுளுட் காணப்படும்; அல்லன வழக்கின்மேற் காட்டுதும்.

  • மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்கு (அகம் : 31)

எனவும்,

  • 'இல்லிறைப் பள்ளிதம் பிள்ளையொடு வதியும்’

§ (குறுந் : 46) எனவும, .

  • 'பைதற் பிள்ளைக் கிளிபயிர்ந் தாஅங்கு (குறுந் 139) எனவும் இவை மருந்தும் ஊர்க்குருவியும் கிளியுமென்னும் பறவைமேல் வந்தன; பிறவும் அன்ன.

புள்ளுக்குலம் பலவாகலான் இச்சூத்திரத்துள் மரபு எத்துணையும் பலவாத னோக்கி முதற் சூத்திரத்துட் பார்ப்பினை முற்கூறினானென்பது.2 ஆய்வுரை : முற்கூறப்பட்ட இளமை, ஆண்மை, பெண்மையென்னும் மூவகைப் பெயர்கட்கும் உரிய சிறப்பு விதிகள் இதுமுதல் 26 - ஆம் சூத்திரம் முடியவருகின்ற சூத்திரங்களால் முறையே கூறப் படுகின்றன. (இ-ள்) பார்ப்பு, பிள்ளை யென்பன இரண்டும் பறவை யினத்தின் இளமையினை யுணர்த்தும் பெயர்களாகும் எறு. (ச) டு. தவழ்பவை தாமும் அவற்றோர் அன்ன. இளம்பூரணம் : (இ-ண்) என்றது ஊர்வனவற்றிற்கு மேற் சொல்லப்பட்ட இருவகை3 இளமைப் பெயரும் ஆம் என்றவாறு f இ புள்ளிளமை-பறவையுள் இளமை பறவையினம் பலவாதல் பற்றி அவ்வினத்திற்குச் சிறப்புரிமை யுடைய பார்ப்பு' என்னும் இளைமைப் பெயரை இங்கு முதற் கண் எடுத்துரைத்தார் தொல்காப்பியனார், 3. இருவகை இளைமைப் பெயர் ஆவன பார்ப்பு, பிள்ளை.