பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 5 § தொல்காப்பியம் அவற்றோடு குற்றமின்மையும் உத்திவகையுங் கூட்ட நூலி லக்கணம் ஐந்தாயின. இதனது பயம்; இவற்றது விரிசூத்திரங்களான் உய்த் துணர்வான் எடுத்தோதித் தொகுத்துக் காட்டலாயிற்று. மற்றுக் குற்றத்தினை இடைவைத்து உத்திவகையினை ஈற்றுக்கண் வைத்த தென்னையெனின், ஈரைங்குற்றமுமின்றி வரும் இலக்கணம் முதனுாற்கண் இல்லையென்பது முதல்வன் கண் (தொல்-மர 106) என்புழிச் சொல்லுமாகலின், அவை போல முதனுாற்கண் உத்திவகையும் வாரா, சிறுவரவின வென்றற் கென்பது. இனி, ஒத்த வென்றதனாற் பொதுப்பாயிரமுஞ் சிறப்புப் பாயிரமும் சூத்திரமுந் தம்மின் வேறென்றலும், அவ்விருவகைப் பாயிரவுரையுஞ் சூத்திரவுரையும் வேறெழுதப்படுமென்றலுஞ், சூத்திரவுரையுட் பாயிரவுரை மயங்கிவருவன உளவென்றலும், அவ் விருவகை யுரைக்கும் வேறாயினும் அவ்வுரைசெய்தான் பெயர் கூறுதன் முதலாகிய பாயிரவுரை கூற அமையுமெனறலுஞ் சூத்திரந் தானே பாயிரமில்லாதவழிப் பாயிரம்போல நூன்முகத்து நிற்கு மென்றலும், அங்ங்ணம் நின்றவழிப் பொதுப் பாயிரமும்; சிறப்புப் பாயிரமும் உரைவகைத்தாற் பெய்துரைத்தலும், அவ்விருவகைப் பாயிரமுஞ் செய்தார் இன்னாரென்றலுமென்று இன்னோரன்ன கோடலாயிற்று. இவையெல்லாஞ் சூத்திரத்தோடு ஒத்த இலக் கணமேயாதலின் ஒத்தவென்னும் மாட்டேற்றாண்டங்கின. அவை வருமாறு : 'வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்' என்னும் பொதுப்பாயிரமும், "வடவேங்கடந் தென்குமரி' (தொல் : பாயிரம்) என்னுஞ் சிறப்புப்பாயிரமும், ஒழிந்த சூத்திரங்கள்போல நூற்பாவகவலாகி நூலின்வேறாகி இன்றியமையாவாயின. அவற் றிற்குச் சூத்திரவுரையோடு மயங்காமல் வேறுரையும் ஆண் டெழுதப்பட்டன. 'எழுத்தெனப் படுப' (தொல்-எழுத் : 1) என்னுஞ் சூத்திரத்தினை நிறீஇ என்பது சூத்திரமெனவும், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனவும், இவ்வதிகாரம்