பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைவியல் 観5ー பாதனை துதலியதெனவும், அவற்றிற்கு விடைகூறலும், இவ் வதிகாரம் எனைப்பகுதியான் உணர்த்தினானெனவுங்கூறி ஒழிந்த ஒத்திற்கும் இவ்வாறே சூத்திரைவுரையோடு பாயிரவுரை மயங்கச் சொல்லியவாறும் அவற்றவற்றுட் கண்டுகொள்க. இனி, இவ்வுரைசெய்தார் யாரோ (வெனின்) -வென்றவழி, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரென உரை யெழுதினான் பெயர் கூறுதலுஞ் சூத்திரஞ்செய்தான் பெயர் கூறுதலோடு ஒத்த இலக்கணத்ததாயிற்று. 'அன்பி னைந்தினைக் களவெனப் படுவ தந்தன சருமறை மன்ற லெட்டனுட் கந்தருவ வழக்க மென்மனார் புலவர்' (இறையனார் : 1) என்பது பாயிரமின்றித் தானே நூன்முகத்துநின்று இருவகைப் பாயிரவுரையும் பெய்து உரைக்கப்பட்டது. "வடவேங்கடந் தென்குமரி என்னுஞ் சிறப்புப்பாயிரஞ் செய்தார். பனம்பாரனாரெனவும், 'வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்' என்னும் பொதுப்பாயிரஞ் செய்தான் ஆத்திரையன் பேரா சிரியனெனவும் பாயிரஞ்செய்தான் பெயர் கூறியவாறு. என்பது பாயிரம். என்னுதலிற்றோ (வெனின்)வெனப் பாயிர வுரைக்கு முகவுரை வந்தவாறு கண்டு கொள்க. பிறவும் அன்ன. ஆய்வுரை : . இது, நூலின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ஸ்) பொருளின் தொடர்ச்சியால் ஒத்தமைந்த சூத்தி ரத்தின் பொருளை விரித்துரைக்குமிடத்துக் காண்டிகையுரையும் அதனை மேலும் விளங்க விரித்துரைக்கும் விரிவுரையும் உடைய தாகிப் பத்து வகைக் குற்றமும் இன்றி நுண்பொருளினவாகிய முப்பத்திரண்டு வகை உத்திகளொடும் பொருந்தி வருவதனை நூல் எனச் சிறப்பித்துக் கூறுவர் நுண்பொருள்களை ஆராய்ந்து உணர்த்தவல்ல புலவர் பெருமக்கள் எ-று. 'ஒத்த சூத்திரம்’ என்றதனால், பொதுவும் சிறப்புமாகிய இருவகைப் பாயிரங்களோடும் உரைப்பாயிரத்தோடும் தொடர்