பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

濮袋空 தொல்காப்பியம் தலும் விலக்கலும் உடையோர் வகையொடு' எனப் பாடங் கொண்ட பேராசிரியர் 'கடாவிற்கு விடை கூறுவாரும் போலி மறுப்பாரும் சொல்லும்சொற் பகுதியொடு' என உரைவரைந் தார் வகை’ என்றதனான், அவ்விரு பகுதியும் காண்டிகைக்கு வருங்காற் குறிப்பினாற் கொள்ளவரும் எனவும், (விருத்தி) உரைக் கண் வருங்காற் கூற்றினாற் கொள்ளவரும் எனவும் கொள்க’ எனவும், இவ்வியில் கoசு - ஆம் சூத்திரத்து மறுதலைக்கடாஅ மாற்றமும் உடைத்தாய் என்றது பிறன்கோள் கூறல் பற்றியது, எனவும், இச் சூத்திரத்து விடுத்தலும் விலக்கலும் உடையோர் என்றது, அன்னதன்றி அறியாது வினாவுதலும் உண்மையல்லாப் போலியை விலக்குதலுமாய்ச் சூத்திரப் பொருளை விளக்குதற்கு வந்தது எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு உளங் கொளத்தக்கதாகும். 'நூலாவது மூவகைத்தாய், மூவரின் நடைபெற்று, நால் வகைப் பயத்ததாய், எழுவகை ஆசிரியமதவிகற்பத்ததாய், பத்து வகைக்குற்றத்திற்றீர்ந்து பத்துவகை மாண்பிற்றாய் பதின்மூன்று வகையான உரைபெற்று முப்பத்திரண்டு தந்திரவுத்தியொடு புணர்ந்து வருவது'. - அவற்றுள் மூன்று வகையாவன தந்திரம், சூத்திரம், விருத்தி என இவை. மூவரின் நடைபெறலாவது, அம்மூன்றும் நடத்து வார் மூவர் ஆசிரியர் எனக் கொள்க. நால்வகைப் பயனாவன அறம் பொருள் இன்பம் வீடு என்பன. எழுவகை ஆசிரியர் மத விகற்பமாவன: உடன்படல், மறுத்தல் என்பன முதலாகவுடையன எனக் கொள்க. பத்துவகைக் குற்றமாவன: குன்றக்கூறல் முதலாகவுடைய எனக் கொள்க. பத்துவகை மாண்பாவன, சுருங்க வைத்தல் முதலாகவுடையன எனக் கொள்க. பதின்மூன்றுவகை உரையாவன: சூத்திரம் தோற்றல் முதலாகவுடையன எனக் கொள்க. முப்பத்திரண்டு தந்திரவுத்தியாவன, நுதலிப்புகுதல் J. & so e o e = * * உய்த்துணரவைத்தல் என இவை பாடலனார் உரை" என்பது யாப்பருங்கலவிருத்தியாசிரியர் தரும் நூலைப்பற்றிய விளக்கமாகும். (கoக)