பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟豁盛 தொல்காப்பியம் 'சூத்திரந்தானே, ஆடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே” (தொல்-செய்:169) என மேற் செய்யுளியலுள் விதந்தோதிய இலக்கணமுடைத் தாய். எனவே, வழுவமைக்கின்ற கிளவியாக்கத்து முதற் கண்ணே வினையியலுட் கூறப்படும் இலக்கணத்தினை ஆண்டு ஒர் பகாரப்படக் கூறியதுபோல, அடிவரையின்மைக்கு ஆண்டுக் கூறியதல்லது இச் சொல்லப்பட்ட இலக்கணம், ஈண்டு இனிக் கூறுகின்ற இலக்கணத்தோடுகூடிமரபெனவேபடும் என்றானாம்.1 ஆண்டுப் பொதுவகையாற் கூறிய நூலிற்கும் இஃதொக்கும். என்னை? பல சூத்திரந் தொடர்ந்து நூலாகி ஈண்டே மரபு கூறப்படுதலின் உரையாயின் அன்னதன்றி நால்வகையுரையுள் ஏற்பது பகுதி வேறுபடும் மரபு கூறுகின்றமையின் அது செய்யு ளியலுட் கூறியவாறு போலாது வேறெனவேபடும் ஈண்டென்பது இனி, முற்கூறிய பாயிர இலக்கணத்தினை இன்றியமையாது சூத்திரமென்றற்கும் இதுவே ஒத்தாகக் கொள்க; என்னை? மேற் புறத்தினின்று மேற்கிளந் தெடுத்த யாப்பெனவே படுமா சலி னென்பது. இதனது பயம்; பாயிர இலக்கணங்களோடு பொருந்தச் சூத்திரஞ் செய்த லென்பதாயிற்று. இஃது ஒப்பக்கூற (665) லென்னும் உத்திவகை. 1. வினையியலிற் கூறப்படும் ನಾಸ್ತಾ ஓர் உபகாரப் படக் கிளவியாக்கத்து முதற்கண்ணே கூறியதுபோல மரபிய லிற் கூறப்படும் சூத்திரத்தின் இலக்கணத்தினை அடிவரை யின்மைக்குச் செய்யுளியலில் ஒர் உபகாரப்பட எடுத்துக் கூறினார். சூத்திரத் தியல்பினை நூலின் மரபுபற்றி இங்கு விரித்துக் கூறியதன்றிக் கூறியது கூறல் என்னும் குற்றப்பட ஈண்டுக் கூறினாரல்லர். இவ்வாறே இங்குச் சொல்லுதற்குரிய நூலின் இலக்கணம் அடிவரையில்லனவாகிய அறுவகை யாப்பு வகையுள் ஒன்றாகச் செய்யுளியலிற் பொதுப்படக் கூறப்பட்டது எனப் பேராசிரியர் கூறிய அமைதி இங்குச் சிந்தனைக்குரியதாகும்.