பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 165 மேற்கிளந்தெடுத்த இலக்கணமாவது, ஆடி நிழற்போல் பொருளானுந் தேர்தல்லேண்டாமற் பொருட்பெற்றி உணர்கின் ஹாங்குச் சூத்திரத்தொடருள் இலக்கியமின்றாயினும் அதனை இதுகேட்டான் காணுமாற்றாற் செய்தலாயிற்று. இனி, மேற்கிளந்தெடுத்த பாயிர இலக்கணம் சூத்திரத் தோடு பொருந்துங்காற் பொதுப்பாயிர இலக்கணம் பொருந்தா, சிறப்புப்பாயிர இலக்கணம் எட்டுமே பொருந்துவனவெனக் கொள்க. அஃதென்னை பெறுமாறெனின், மேற்கிளந்த யாப் பென்னாது எடுத்த யாப்பென்றதனானே ஒரு நூற்குச் சிறப்பு வகையான் இன்றியமையாதாகி எடுத்துக்கொள்ளப்படுவது வடவேங்கடந் தென்குமரி (பாயிரம்) என்றாற்போலும் சிறப்புப்பாயிரமாகலானும், பொதுப்பாயிரம் எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படுமென்றற்கும் அங்ங்னங் கூறப்பட்டது. சில்வகை எழுத்தின் செய்யுட்டாகி ஆடிலிநிழன் அறியச் செய்யுங்கால் அதுபோல ஒருவழிப் பொருளடக்கி ஒருவழி வெள்ளிடை கிடப்பச் செய்யப்படாது பொருட்கு வேண்டுஞ் சில சொல்லாற் செய்யுஞ் செய்கைத்தாகி; செய்யுள்ென்றான் அடிவரைச் செய்யுளின் வேறுபட்ட பொருட்பாட் டிற்றாகிய அடிவரைப் பாட்டினுட் சிறப்புடைய ஆசிரியத்தானும்: வெண்பாவானும் செய்யவும்படுஞ் சூத்திரமென்றற்கென்பது என்னை? மண்டிலப்பாட்டின் உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தமையானுஞ், 'சின்மென் மொழியிற் றாய பனுவல்’ வெண்பாட் டாகி வருமாத லானு மென்பது. சொல்லுங் காலை உரையகத்து அடக்கி - பொருளானும் போலியானுஞ் சொல்லுவார் சொல்லுங்கால் அவ்வுரையெல்லாந் தன்னகத் தடக்கி; - நுண்மையொடு புணர்ந்த ஒண்மைதாகி - பருப்பொருட் டாகிய பாயிரம் போலாது நுண்பொருட் டாகிய பொருள்கேட் டார்க்கு வெள்ளிதன்றி உள்ளுடைத்தாகி; துளக்க லாகாத் துனைமை எய்தி - முன்னும் பின்னுங் கிடந்த சூத்திரங்களானே தன்னுட் பொருள் இன்றியமையா தாகலெய்தி எனவே, ஒன்றொன்றனை இன்றியமையாத உறுப் புப்போலச் செய்யல் வேண்டுமென்றவா றாயிற்று.