பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

மரபியல் பேராசிரியம் : (இ-ள்) பார்ப்பும் பிள்ளையுந் தவழ்பவற்றிற்கும் உரிய (எ-று). - அவை ஆமையும் உடும்பும் ஓந்தியும் முதலையும் முதலாயின. ஆமையும் முதலையும் நீருள் வாழினும் நிலத்தி யங்குங்கால் தவழ்பவை யெனப்படும். (உ- ம்). யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே’’ (குறுந் : 152) எனவும் 'தன்பார்ப்புத் தின்னு மன் பின் முதலை’ (ஐங்குறு : 41) எனவும் 'தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத் தவனுார் (ஐங்குறு : 24) எனவும் வரும். "தாமும்’ என்றதனான் ஊர்வன நடப்பனவுஞ் சிறுபான் மை பிள்ளைப்பெயர்க்கு உரியன கொள்க. அது, பிள்ளைப் பாம்பென ஊர்வன மேல் வந்தது. 'பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி' (குறுந்: 107) என நடப்பனமேல் வந்தது. 'மூங்காப்பிள்ளை' என்பதும் ஈண்டே கொள்ளப்படும். பார்ப்பும் அவ்வாறே வருவன உள வேற்கொள்க. இதுவுந் தவழுஞ் சாதிக்கெல்லாம் பொதுவாகிய பரப்புடைமையின் இரண்டாவது வைத்தானென்பது ஆய்வுரை : (இ-ள்) ஊர்வனவற்றுக்கும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பு. பிள்ளை என்னும் இளமைப்பெயர் இரண்டும் உரியனவாகும் எ-று. தவழ்பவை - ஊர்வன. 1. தவழ்பவை - நிலத்தில் ஊர்ந்து செல்வனவாகிய உடும்பு, ஒந்தி முதலிய உயிரினங்கள். ஆமையும், முதலையும் நீரில் வாழும் உயிரினங்களாயினும் அவை நிலத்தில் ஊர்ந்து செல் லுங்கால் தவழ்பவை எனப்படும்.