பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 $ ë தொல்காப்பியம் அளக்கலாகா அரும்பொருட்டு ஆகி அளத்தற்கரிய பெரும் பொருட்டாகி; பல்வகையானும் பயன் தெரி புடையது - பலவாற்றானும் பொருள் விளங்க வருவது; சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர் - இவையெல் லாஞ் சூத்திரத்திலக்கணமென்று முதனூல்செய்த ஆசிரியராற் சொல்லப்பட்டன (எ து) இஃதியல்பெனவே இவற்றிற் சிறிய வேறுபட்டன. விகார மென்றானாம். "உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமு முயிரும் வருவழி யியற்கை' (தொல்-எழுத்து-தொகை : 21) என்றவழி, யகரமும் உயிரும் வருவழியெனவே இது நிலை மொழித் தொழிலென்பது, ஆடி நிழவின் அறியத் தோன்றிற்று. இனி, நிலைமொழித்தொழில் வேறு கூறினமையின், "மயங்கா மரபி னெழுத்துமுறைகாட்டி (தொல்-பாயிரம்) எனப் பாயிர இலக்கணத்துடன் பொருந்துவதாயிற்று. இனி, எண்வகையாற் பரந்துபட்ட புள்ளியிற்றுச் சொல்லினையெல்லாம் உகர மொடு புனரும் புள்ளியென அடக்கினமையிற் சில்வகை யெழுத்தின் செய்யுளு மாயிற்று. யகரமும் உயிரும் வருவழிஇயற்கை யெனவருமொழிப் பரப்பெல்லாம் அடக்கினமையின் அதற்கும் இஃதொக்கும்; இதனைப்பற்றி யெழுந்த பொய்ப்பொருளும் மெய்ப்பொருளும் பலவாகலின் உரையகத் தடக்கலும் உடைத்தாயிற்று. தொகைமரபி னு:ள்ளும் உயிர்மயங்கியலி னுள்ளும் புள்ளிமயங்கியலி னுள்ளும் குற்றியலுகரப் புணரியலிஆள் ளும் பரந்துபட்ட பொருளினை நுழைந்து வாங்கிக்கொள்ள வைத்தமையின் நுண்மையொடு புணர்ந்ததுஉ மாயிற்று. இச் சூத்திரம் பொருளுரைத்தவழியும் வெள்ளிதன்றி உள்ளுடைத் தாகலின் நுண்மையுடைத்தெனவும் பட்டது. ' குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும் (தொல்-எழுத்து தொகை : 18) > * என்பது உம்