பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖亨翰 தொல்காப்பியம் (இ-ள்) : விட்டகல்வின்றி விரிவொடு பொருந்தி சொற் படுபொருள் சொல்லுங்கால் தொடர்மொழிகளைத் தொகைநிலை பயனிலை முதலாயவற்றாற் பகுத்துக்கூறாது பகுத்துக்கூறும் உரைவிகற்பம் போன்று மற்றப்பொருள் தோன்றி; விடுத்த லென்பது, கண்ணழிவு: அக்கண்ணழிவான் அகன்றுபடுதலின்றி விட்ட கல்வெனப் பட்டது. அங்ங்னம் அகன்றுபடுதலின்றி யெனவே, இஃது இன்ன வேற்றுமைத்தொடர் இஃது இன்ன பயனிலைத்தொட ரென்றாற்போலச் சொன்னிகழ்ச்சியுடைத் தாயின் அஃது உரையெனப்படுமென்றானாம். சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா - இது நியமச் சூத்திரம் அதிகாரச்சூத்திர மென்றாற்போல முதற்கட் சொல்லிய சூத்திரப்பெயரினை அவ்வாறாகி முடிந்த முடிபு சொல்லுதல் பொருட்டாக; ஏது நடையினும் - நியமச் சூத்திர மென்றானும் பிறிதொன்றென்றானும் மேற்கொண்டக்கால் இன்னது காரணத்தினெனக் காரணங் கூறும் வழக்கினானும்: எடுத்துக்காட்டினும் - அங்ங்னங் காரணங் கூறியக்கால் அதற் கேற்பது ஒன்றாயினும் உதாரணமாயினும் வழிநூற்காயின் முதனூல் எடுத்துக் காட்டுதலாயினும் ஒன்று பற்றியும்; மேவாங் கமைந்த மெய்ந்நெறித்து அதுவே சூத்திரஞ் செய்த ஆசிரியன் வேண்டியதே சொல்லிவிடும் பொருளிலக்கணத்திற்று மேற்கூறி வருகின்ற காண்டிகை (எ-று). இது, மெய்ந்நெறி யென்பது சூத்திரத்துச் சொல்லிற் கருதிய பொருளிலக்கணம் அதனை அவன் வேண்டியாங்குச் சொல்லி முடிப்பினல்லது சூத்திரத்துச் சொற்கண் வந்த சொல் லாராய்ச்சியும் எழுத்தாராய்ச்சியும் அறிய வேண்டுவன வெல் லாஞ் சொல்லாரென்பதுகருத்து. இதனை ஈற்றுக்கண் வைத்த தனானே வருகின்ற உரையும் இங்ங்னம் விட்ட கல்வின்றி வருத லுடைத்தெனக் கொள்க. உதாரணம் : 'இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்' (தொல்-சொல்-கிள - 19) 1. விட்டு அகல்வு இன்றி என்புழி விடுத்தல் என்பது கண்ணழிவு செய்தல், அகல்வு-அக்கண்ணழிவால் சூத்திரப்பொருள் அகன்று படுதல். பதம்பிரித்துப் பொருள் உரைத்தலால் சூத்திரப் பொருள் விளங்கித் தோன்றுதல் விட்டகல்வு எனப்பட்டது