பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 盟了篮 என்பது த ன்றன்மையான் நிகழ்பொருளை இன்னதன்மைத் தென்று சொல்லுக வென்றவாறு. அது நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி யுளரும் என்றாற் போல்வன. இதற்குக் கருத்தோதுதல் பாயிரவகையாற் பெறுமென்பது. உாைப்பிற் காண்டிகை' (தொல்-மர 98) என்புழிக் கூறிவந்தாம். மற்று, உயர்திணையென்று சொல்லுப ஆசிரியர் மக்கட் சுட்டின் கண், அஃறிணை யென்று சொல்லுப ஆசிரியர் அவரல பிறவற்றுக்கண் அவ்விருதிணைப் பொருண் மேலும் இசைக்குஞ் சொல்லினை (தொல், சொல்: 1) யென்றக்காலும், வேற்றுமை யெனப்பட்ட பொருள் ஏழு என்ற க்காலும் உதாரணம் காட்டுமாறென்னை அவற்றவற்றுப் பின் வேறு சூத்திரங்களான, ஆடுஉ வறிசொன் மகடூஉ வறிசொற் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி” எனவும், 'ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று' (தொல்-சொல்-கிள 3) எனவும், ' அவைதாம், பெயர் ஐ யொடுகு இன் அது கண்” (தொல்-சொல்-வேற் : 3) எனவும் உதாரணங் கூறுமாலெனின், - அவை துளக்கலாகாத் துணைமை யெய்தி நின்றமையின் அவ்வாறு உதாரணம் ஆண்டுக் காட்டாக்காலும் அமையும், அவற்றைப் பிற்கூறுமாகலினென் பது: அல்லது உம் எதிரது நோக்கி உயர்திணைச்சொன் மூன் றும் அஃறிணைச்சொல் இரண்டுங் காட்டியக்காலும் இழுக்கன் றென்பது, ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். ஆய்வுரை : இது, மேற்குறித்த காண்டிகைக்கு எய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ஸ்) சூத்திரத்திலமைந்த தொடர்மொழிப் பொருளைக் கண்ணழிவு செய்து தொகைநிலை பயனிலை முதலியவற்றாம் பகுத்துச் சூத்திரப்பொருளை விரித்துரையாமல், அதே நிலை