பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 7 தொல் காப்பியம் வருதலுமென இருவகையும் உடைத்தென்றால் இனிச் சூத்திரத் துட் பொருளன்றியும் ஒருதலையாக அதற்கு இன்றியமையாது. பொருந்துவனவெல்லாம் அதனோடு கூட்டிச் சொல்லுதல் உரை யெனப்படும் (எ-று). هائي لتقي بقيه இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் ' (தொல்-சொல்-கிள 19 என்றவழி எடுத்தோத்தின்றி நிலம் வலிதாயிற் றென்னும் வழு வமைதி கோடலும், R ஒத்த சூத்திரம் ' (653) என்றவழிப், பாயிரம் ஒத்த சூத்திரமென்று கோடலும் இன்னோரன்ன கொள்க. எல்லாமென்றதனாற் சூத்திரப்பொருளேயன்றி எழுத்துஞ் சொல்லும்பற்றி ஆராயும் பகுதியுடையவாதல் வேண்டும் அவ் வுரையென்பது கொள்க. இனி, மேற் காண்டிகைக்கு ஒதிய இலக்கணங்களுள் இதற் கேற்பனவெல்லாம் அதிகாரத்தாற் கொள்ளப்படும். அவை 1ஏதுவும் 2நடையும் எேடுத்துக் காட்டுஞ் சூத்திரமுஞ் சுட்டுதலுமென்று இன்னோரன்ன கொள்க. இவையெல்லாந் தழுவுதற்குப் போலும், இன்றி யமையா தியைபவை யெல்லாம் ? என்று எடுத்தோதுவானாயிற்றென்பது. ஆய்வுரை : இஃது உரையின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) சூத்திரத்திற் கூறப்படும் பொருளை விளக்கு மளவில் நின்று விடாமல் அப்பொருளொடு தொடர்புற இன்றி யமையாது அவ்விடத்திற் கொணர்ந்து உரைக்கத்தக்கனவெல் லாம் சூத்திரப் பொருளொடு பொருந்தக் கூட்டியுரைப்பது உரை யெனச் சிறப்பித்துரைக்கப்படும் எ-று. குற்றமில்லாத சூத்திரப் பொருளைத் தனக்குரிய இலக்கணத் துள் ஒன்றும் மறையாது முடித்துக் கூறுவதும், அதனையே ஏதுவும் எடுத்துக் காட்டும் தந்து விளக்குவதும் எனக் காண்டிகை இருவகைப்படும் என முன்னுள்ள இருசூத்திரங்களாற் புலப்