பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量急 தொல்காப்பியம் சு. மூங்கா வெருகெலி மூவரி அணிலொடு: ஆங்கவை நான்குங் குட்டிக் சூரிய. இளம்பூரணம் : (இ-ன்) என்றது, இவை நான்குங் குட்டி என்று சொல்லப் படும் என்றவாறு. மூங்கா என்பது கீரி. இது,மேல் எடுத்தோத்தானும் இலேசானும்? அதிகாரப் பட்ட தவழ்வனவும், நடப்பனவும் பற்றிக் குட்டியென்னும் பெயரினையு முறையன்றிக் கூறுகின்றது. (இ-ள்) குட்டியெனப்படுவன இவை நான்கும் (எ-று). அவை, மூங்காக்குட்டி, வெருகுக்குட்டி, எலிக்குட்டி, அணிற்குட்டி யெனவரும். 'மூவரியணிலென்றதனான் ஒழிந்த மூன்றுந் தம்முள் ஒரு பிறப்பினவாம்; இவை யொருநிகரனவே என்பது கொள்க.3 "ஆங்கவை நான்கும்’ என்றதனால் தத்துவனவற்றுக்கும் குட்டிப்பெயர் கொடுக்கப்படும்; தவளைக்குட்டி யெனவரும். மேல் ஊர்வனவற்றுக்குந் தவழ்வனவற்றிலக்கணம் எய்துவித்தமை யாற் பாம்புக்குட்டி யென்பதுங் கொள்க. 1. வெருகு - காட்டுப்பூனை. முதுகின் புறத்தே மூன்று கோடு களையுடைய அணில் என அதன் உருவ இயல்பினைப் புலப் படுத்துவார். 'மூவரி அணில் என அடை கொடுத்து ஒதி னார். வரி-கோடு. 2. எடுத்தோத்து என்பது, கூற எடுத்துக்கொண்ட இலக்கண - விதியினைப் பெறுதற்குரியன இவையென அவற்றை எடுத்துக் கூறும் சிறப்புவிதி. இலேசு என்பது, அவ்விதியினைக் கூறும் சொற்றொடரமைப்பால் புலப்படுத்தப்பெறுவது. தாமும்: என்றதனால் ஊர்வனவும் நடப்பனவும் சிறுபான்மை பிள்ளைப் பெயருக்கு உரிய எனக் கொள்க’ என்றது இலேசு, 3. மூங்கா, வெருகு, எலி என்னும் இம்மூன்றின் வேறாக அனிலை 'மூவரியணில் என அடைமொழிபுணர்த்துக் கூறினமையால் முன்னர்க் கூறிய மூன்றும் பிறப்பு வகையால் ஒத்த தன்மையன என்பது பேராசிரியர் கருத்து. t