பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘岛籍 தொல்காப்பியம் ஆய்வுரை : இது வழி நூற்கே யாவதோர் வேறுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட இலக்கண மெல்லாம் சிதையாமல் மாட்சிமைப்படினும் முதனூலொடு மாறுபடவரினும் அந்நூல் சிதைவுடையதெனவே படும் எ-று. மறுதலையாதல் - முதல்நூற்பொருளொடு மாறுபடுதல் சிதைவு - குற்றம். மேற்கூறப்படும் கூறியது கூறல் முதலாகிய பத்துக் குற்றங்களுடன் இங்ங்ணம் முதனூலொடு மாறுகொள்ள வரினும் அதுவும் குற்றமாகவே கொள்ளப்படும் என அறிவுறுத்து வர். மறுதலையாயினும் மற்றது சிதைவே என்றார் ஆயினும் என்புழி உம்மை மேற்கூறப்படும் கூறியது கூறல் முதலாகிய குற்றப்பட வருகலேயன்றி இவ்வாறு முதனூலொடு மாறுபடி லகின் குற்றமாம் என எதிரது தழிஇ வந்தமையின் எதிரது தழிஇய. எச்சவும்மையாகும் எனக் கொண்டார் பேராசிரியர், இனி, மறுதலையாயின்' என்ற பாடம் இளம்பூரணர் உரைப் பதிப்பிற் காணப்படுகிறது. (&oങ്ങ്) 80.அ. சிதைவில் என்ப முதல்வன் கண்ணே பேராசிரியம் : இது மேற்கூறிய வழிநூற்குப்போல முதனுாற்கே ஆவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ.கள்) மேற் பொதுவகையாற் கூறப்பட்ட நூலிலக்கணம் ஐந்தனுள் ஈரைங்குற்றமுமின்றியென முன்னே ஒதிய இலக்கணம் ஒன்று முதனுாற்காயின் அம்மரபின இலக்கணம் வேண்டுவ தன்று (எ-று). சிதைவிலக்கணத்தைச் சிதைவென்று ஒதினான் ஆகுபெய ரானென உணர்க. மற்று, 'வினையி னிங்கி விளங்கிய அறிவின் முனை வற்கு’ (649) 1. வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனாகிய முதனூலாசிரியன்பால் எத்தகைய குற்றங்களும் இல்லையாத் லால் மேல் ஈரைங்குற்றமுமின்றி என வழிநூற்குச் சொன்ன இலக்கணம் முதனூலுக்காயின் வேண்டற்பாலதன்று; என்ப தாம்.