பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霞82 தொல்காப்பியம் ஆய்வுரை : இது முதனுாற்குரியதோர் மரபுணர்த்துகின்றது (இ-ள்) முதல்வன் செய்த நூலின்கண்ணே கூறியது கூறல் முதலிய குற்றமுடைய இலக்கணங்கள் உளவாகா என்பர் பெரியோர் எ-று. முதல்நூல் செய்தவன் வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் ஆதலானும், அவன் நூல்செய்தற்குமுன் அதற்கு முதனுாலாகப் பிறிதொரு நூல் இன்மையானும் முதல்வன் கண் சிதைவு இல என்ப' என்றார் சிதைவு - குற்றம்; சிதைவுடைய இலக்கண்த்தைச் சிதைவு என்றார். இந்நூற்பாவுக்கு இளம்பூரணருரை கிடைக்கவில்லை. (ఉ02) கoக. முதல்வழி யானும் யாப்பினுட் சிதையும் வல்லோன் புனையா வாரம் போன்றே. இளம்பூரணம் : வழிநூற் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ன்) முதனூலின் வழிச்செய்யிலும் அந்நூல் யாப்பி னுட் சிதையும் வல்லவன் புனையாத வாரம்போல வென்ற வாறு . இது, முதனுாலொடு மறுதலைப்படுதல் வழிநுாற்குக் குற்ற மென்கின்றது. (இ-ள்) முதல்வழியாயினும் யாப்பினுட்சிதையும் - அதி காரத்தானே முதனுாலினைக் குற்றமின்றி வருவதென்று ஈண்டு இலக்கணங்கூறல் வேண்டுவதன்றென்றான் இனி அம்முதனுள் லினை மாறுபடாமல் ஆண்டோதிய பொருண்மை கூறுமாயி னும், நால்வகை யாப்பினுண் முதனின்ற மூன்றும்பற்றி வழி நூற்குக் குற்றம் பிறக்கும்; மற்று மொழிபெயர்த்தலொழியக் கொள்ளுமாறென்னை யெனின், யாப்பினுட் சிதையு மென்று இடமும் இடத்தியல் பொருளுமாக ஓதினாகலின் அஃதொழிக்கப் படும். மற்று அஃதொழிக்குமாறென்னை யெனின், - தமிழ் நாட்டு வழக்கிற்கு முதனூலாகிய அகத்தியத்துண் மொழி