பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் $ 85 ஆய்வுரை : இது, வழிநுாற்கு ஆவதோர் மரபுணர்த்துகின்றது. (இ-ன்) முதனுாலையே அடியொற்றி மாறுபடாமை அங்கு ஒதிய பொருளையே வழிநூல் கூறுமாயினும், இசைவல்லவனாற் புணர்க்கப்படாத வார இசை போன்று, (தொகுத்தல், விரித் தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு என்னும்) யாப்புவகை காரணமாக வழிநூலில் இலக்கணச் சிதைவு ஏற்படுதல் உண்டு (அத்தகைய சிதைவு நேராதவாறு வழிநூல் செய்க) எறு. யாப்பு என்றது, வழி நூலின் அமைப்பு முறையாகிய தொகுத்தல் முதலிய நால்வகையாப்பினை. முதனுாலாசிரியன் கூறிய பொருண்மையினை அடியொற்றி வழிநூல் செய்யுங்கால் தொகுத்துரைக்கத்தக்கன இவை, விரித்துரைக்கத் தக்கன. இவை, இவ்விருதிறமும் அமையக் கூறத்தக்கன. இவையென்று ஆராய்ந் துணர்ந்து, அவற்றை அம்முறையில் யாத்தமைத்தல் கற்றுத் துறைபோயினார்க் கல்லது ஏனையோர்க்கு அத்துணை எளிதன் நாகலின் முதல்வழியாயினும் யாப்பினுட் சிதையும்’ என்றார். வல்லோன் என்றது, இசைத் துறையில் வல்லவனை வாரம் என்பது, இசைப்பாடலில் முற்கூறு பாடுவார்க்குரிய இசையுடன் பொருந்தப் பிற்கூறுபாடுவோர்க்குரியதாக அமைக்கப்பெறும் இசையமைப்பினை, இசைத்துறையில் வல்லவன் அல்லாதவனால் அமைக்கப்படும் வார இசை முற்கூற்றினுடன் இணைதலின்றி வழுப்படுதல் போன்று, நூற்புணர்ப் பறியாதான் செய்த வழி நூல் யாப்பு வகையால் முதனுரலொடு மாறுகொண்டு வழுப் படும் என்பதாம். முதனூலின் சொற்பொருளமைப்பினை அடி யொற்றி அதன் வழியில் பொருள்பிறழாமை மொழி பெயர்த் தல் வேண்டும் என்பதனை மொழி பெயர்த்து அதர்ப்பட யாத் தல்' என முன்னர்க் கூறினாராதவின் மொழிபெயர்ப்பு யாப்பு ஒன்று நீங்கலாக ஏனைய தொகுத்தல் முதலிய மூன்றுயாப்பினை இச்சூத்திரம் சுட்டியதாகக் கொள்வர் பேராசிரியர். (கoக) ககo சிதைவெனப் படுபவை வசையற நாடிற் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூறல் மயங்கக் கூறல்