பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 篮器 மற்றுக் கீரியும் நாவியும் போல்பவற்றையுங் குட்டியென் னாரோ வெனின்,என்னார் அவற்றைப் பிள்ளையென்றலே பெரும் பான்மையாகலின் உரிய வென்றதனாற் சிறுபான்மை குட்டி யென்பதுங் கொள்க. மூங்காவின் விகற்ப மென்பாருமுளர். ஆய்வுரை : (இ-ன்) 'மூங்கா. வெருகு, எலி, (முதுகின்மேல்) மூன்று கோடுகளையுடைய அணில் என்னும் இவை நான்கும் குட்டி என்னும் இளமைப் பெயர்க்குரியன எ-று. - ஆங்கவை நான்கும்' என்றதனால் தத்துமியல்பினவாகிய தவளை முதலியவற்றிற்கும் குட்டி' என்னும் இளமைப் பெயர் உரியதாகும் என்பர் பேராசிரியர். - (கள்) எ. பறழெனப் படினும் உறழாண் டில்லை இளம்பூரணம் : (இ-ன்) என்றது, மேற்கூறப்பட்ட நால்வகை யுயிர்க்கும் இளமைப்பெயர் பறழ் எனினும் உறழ்ச்சியில்லை என்றவாறு. எனவே, இரண்டுமாம் என்றவாறாம். இரண்டு என்றது பறழ், குட்டி என்னும் இளமைப்பெயர் இரண்டினையும். பேராசிரியம் : (இ-ஸ்) மேற்கூறிய நான்கும் பறழெனவும்படும் (எ-று). இவை இக்காலத்து வீழ்ந்தன. மற்று முற்கூறிய நான் கினையும்? இப்பெயரானே முற்கூறுக, முதற்குத்திரத்துள் ஒதிய 1. கிரியும் நாவியும் மூங்கா என்பதன் இனமென்று கூறுவாரு முளர். நாவி-புனுகுப்பூனை.

  • மூங்கா - கீரி, வெருகு - காட்டுப்பூனை. -

2. முற்கூறிய நான்கு ஆவன மேலைச் சூத்திரத்திற் கூறப்பட்ட மூங்கா, வெருகு, எலி, அணில் என்பன. முதற்குத்திரத்து ஒதிய முறைமை என்றது. இவ்வியல் முதற்குத்திரத்தில் பார்ப்பு என்னும் பெயரையடுத்துப் பறழ் இரண்டாவதாக, எண்ணப்பெற்றுள்ள வரிசைமுறை.