பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் # 6.3 என்மனார் புலவர்' என்றாற் போல வழிநூல்வாய்பாட்டு மாத்திரையே பயனாகச் செய்வன. மேயங்கக்கூறல் - நிறுத்தமுறையானன்றி. 'அத்தி னகர மகரமுனை யில்லை’ (தொல்-எழுத்-புண :23) என மயங்கக்கூறிப் பிறிதொன்றுகோடல் : 7கேட்போர்க்கின்னா யாப்பிற்றாதல்-சூத்திரச்செய்யுள் கேட்போர்க்கு இன்னாதிசைப்பச் செய்தல். பேழித்தமொழியான் இழுக்கங்கூறல் - முடிவில்லாத சொல்லானும் இழிந்த சொல்லானும் எடுத்து முடிப்பனவற்றை மறு முடிபுபற்றி இழுக்கங் கூறலாயிற்று. 9தன்னானொருபொருள் கருதிக்கூறல் - முன்னோராற் கூறவும்படாது வழக்கினுள்ளதுமன்றித் தன்னுள்ளே ஒரு பொருள் படைத்துக் கூறுதல்; (தன்) ஆனென்பது ஒரு சொல்லெனத் தானென்பதோர் சொற்றாய் மெய்யினுள் உணர நின்றது. தன்னாற் றானொருபொருள்படைத்துக்குறுகச் செய்தன் மூன்றாவதெனினும் இழுக்காது. என்னை? நுதலிக்கூறலென்னும் பயனில்லைக்குத் தானென்னும் பெயர் வெளிப்படா நின்றது வெளிப்படுத்துக்கொளப் பெறுதுமாகலின், 10என்னவகையினு மனங்கோளின்மை-எவ்வாற்றானும் பொருளறிதற்கு அரிதாகச் செய்தல். இவை நான்குங்குன்றக் கூறலொடு கூட்ட ஐந்தும் எஞ்ஞான்றும் பயன்படாதனவாயின அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும் - அவைபோல்வன பிறவும் ஈரைங்குற்றமெனப்பட்ட தொகை எண்ணிற்கு அவ்வாறு தொகுத்தற்கேற்ற விரியெண்ணாம், இவையும் இவைபோல்வன பிறவும் (எ-று). விரிந்தது தொகுத்த லென்பதனான் எதிரதுநோக்கி ஆண்டுத் தொகுத்தானாதலின் ஈண்டு அவற்றைத் தொகை கூறாது விரித்தெண்ணினா னென்பது. பிறவும் என்றதனான் வெற்றெனத் தொடுத்தன் மற் றொன்று விரித்தல் சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்