பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

態9愛 தொல்காப்பியனு புள்ளுக வெறிய வெள்ளென்று பிறழும் பளிங்கு நெகிழ்ந்தன்ன துளங்காத் தெண்ணீர் தளிர்குடைந்து தெவிட்டிய குயில்குனிந்து குடிப்ப மரவந் தாழ்ந்த கரைமரச் சாரற் - றேனாறு தேறல் வேனிற் கண்ணும் வாரார் கொல்லென நீர்வார் கண்ணொடு புலம்புடை மகடூஉக் கலங்களு ரெய்த யாறுங் குளனுங் காவுமாடி யோருயிர் மைந்தரு மகளிருங் களிப்பக் காமவிழவொடு கன்னியர் நோற்ப நிலவுஞ் சாந்தும் பலவயிற் பயன்பட துன்பக் காலந் துடைத்தனர் பெறு உ மின்பக் கால மென்மனார் புலவர்.' என்றாற்போலப் பற்றிக்கூறிப் பெருஞ்சூத்திரஞ் செய்த வழியும் பருவத்திற்கு வரையறையிலக்கணம் போதுதலின்றி விடுதலா யிற்று. இனி, * அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே' (தொல்-சொல்-இடை : 4) எனவும், 'அப்பா லெட்டே யும்மைச் சொல்லே' (தொல்-சொல்- இடை :7) எனவும், 'ஆயி ரைந்தொடு பிறவுமன்ன' எனவும் இன்னோரன்ன பலவும் மிகைபடச் செய்தார் இவ்வாசிரிய ரா.கவிற் பிற்காலத்து நூல்செய்தார்க்கும் மிகைபடச்செய்தல் அமையுமென்பாருமுளர். அற்றன்று, 'யாவயின் வரினுந் தொகையின் றியலா' (தொல் சொல்-இடை : 42) எனப்பட்ட எண்ணாகலின் தொகை,கூறினமையானும் வழக்காத லானும், அதுமுதலாக அல்லது சூத்திரச் செய்யுளுஞ் செய்யாராக லானும், அங்ங்னந் தொகைதொடராக்கால் இரண்டாக்கப்பட்டு விகாரவகையால் தொகுத்தானாமெனவும் அவை பல சொல்லாக