பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘盛 தொல்காப்பியம் முறைமைக் கேற்பவெனின்-அற்றன்று; அவற்றுக்கு இப்பெயர் சிறுபான்மை யென்பான் பிற்கூறினானென்பது. உறழாண்1 டில்லையென்ற மிகையானே, ' கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி' (குறுந் : 69) என்பதுங் கொள்க. ஆய்வுரை : (இ-ள்) : மேற்குறித்த மூங்கா, வெருகு, எலி, அணில் என்னும் நான்கினையும் பறழ் என்னும் இளமைப் பெயரால் வழங்கினும் முரண்பாடு இல்லை எ-று. (எ) உறழ் - உறழ்ச்சி, முரண். ... நாயே பன்றி புலிமுயல் நான்கும் ஆயுங் காலைக் குருளை என்ப. இளம்பூரணம் : (இ-ள்) என்றது நாய்முதலாகச் சொல்லப்பட்ட நான்கின் இளமைப்பெயர் குருளை யென்று வழங்கும் என்றவாறு.8 இது, முறையானே நான்காம் எண்ணு முறைமைக்கணின்ற குருளையாமா றுணர்த்துதல் துதலிற்று. (இ-ள்) நாயும் பன்றியும் புலியும் முயலும் என நான்குங் குருளையென்று சொல்லப்படும் (எ-று). " திறவாக் கண்ண சாய்செவிக் குருளை" இ ண் ? எனவும், (சிறுபாண் : 1.30 1. உறழ் - உறழ்ச்சி, முரண்பாடு என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது. 2. குருளை என்னும் இளமைப்பெயர் நாய், பன்றி, புலி முயல் என்னும் நான்கிற்கும் உரியதாகும். 3. இவ்வியல் முதற்குத்திரத்து நான்காவதாகக் குருளை என்ற பெயர் எண்ணப்பட்ட முறைமை,