பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊3器 தொல்காய்யியல் “எதிர் மறுத் துணரின் நிறத்தவு மிவை’’ (664) என வருகின்ற சூத்திரத்தான் இவையும் இலக்கணத்திற்கு உபகாரப்படுதலி னென்பது! ஆய்வுரை : இஃது ஈரைங்குற்றம் (பத்துக் குற்றங்கள்) இவையெனக் கூறுகின்றது. (இ-ன்) நூற்குச் சிதைவெனக் கூறப்படும் குற்றங்களைப் பழிதீர ஆராயின் கூறியதுகூறல், மாறுகொளக்கூறல், குன்றக் கூறல், மிகைபடக்கூறல், பொருளிலமொழிதல், மயங்கக்கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றாதல், பழித்த மொழியான் இழுக்கம் கூறல், தன்னான் ஒருபொருள் கருதிக்கூறல், என்ன வகையினும் மனங்கோளின்மை என்னும் இப்பத்தும் அவை போல்வன பிறவும் ஈரைங் குற்றம்' என முன்னர்த் தொகுத் துர்ைக்கப்பட்ட அக்குற்றங்களின் விரியாகும் எ-று. (ககo) ககக. எதிர்மறுத் துனரினத் திறத்தவும் அவையே. இளம்பூரணம் : இதுவுமது நூற்குற்றம் உணர்த்துதல் நுதலிற்று. (இ ன்) எதிர்மறுத்து உணர்வராயின், அத்திறத்தவும் குற்றமா மென்றவாறு. பாவஞ் செய்தான் நிரையம் புகுமெனக் கருதிக் கூறுவான் தவஞ்செய்வான் சுவர்க்கம் புகுமென்றல். இவ்வாறு கூறிச் சுவர்க்கம் பெறுமென்னும் பொருட் ... நிரையம்புகுமென்ற பொருள் தோன்றாமையிற் குற்றமாயிற்று. 1. ஆசிரியர் தொல்காப்பியனார் யாண்டும் இலக்கணமே கூறி, இலக்கணத்திற் பிறழ்தலைக் குற்றம் என்று கொள்ள வைப்ப தல்லது நூலுக்கு இல்லாத குற்றங்கட்கு இலக்கணம் கூறும் வழக்கமுடையாரல்லர். அவ்வியல்பினராசிரியர் ஈன்ரங்குற்றங் களை இச்சூத்திரத்தில் எடுத்துக் கூறியது எதிர்மறுத்துணரின் திறத்தவும் அவை என வருகின்ற சூத்திரத்தால் இவையும் உபகாரப் படுதல் நோக்கி என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும். .