பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரபியல் # 97 Gazirirsstífluasan : இது. மேற் குற்றம் பத்துங் கூறி இனிக் குணமும் பத்துள வென்கின்றது. மேலெல்லாம். இவ்வாசிரியன் இலக்கணவழக்கி னையே விதந்தோதி அதனிற்பிறழ்ந்தது குற்றமென்று கொள்ள வைத்தான்; இவ்வோத்தினுள் ஈரைங்குற்றமு' மென்பன சில குற்றங் கூறினான்: ; இது மாறுகொளக் கூறலாங் கொல்லோ வெனின் அற்றன்று; இவையும் இலக்கணமே கூறின்னென் பான் இவற்றை யெதிர்மறுத்துக் கொள்ள வென்றானென்பது. இதனது பயன்; உள்ளது சொல்லுதலேயன்றி இல்லது சொல்லுத லும் நூலிலக்கண மென்றறிவித்த லாயிற்று; அவை, 'பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா? (தொல்-சொல்-வேற் 9) எனவும, வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது (தொல்-சொல்-வினை : 1) எனவும் வரும். எனவே, கூறியது கூறாமை"யும் 'மாறு கொளக் கூறாமையுங் குன்றக்கூறாமையும்' போல்வனவும் பத்து உள நூலிலக்கணமென்றானாம். மேல், 1. மேல் இலக்கண வழக்கினையே விதந்து கூறி, அதற்கு மாறு பட்டது குற்றம்எனக் கொள்ளவைத்த ஆசிரியர், இவ்வியலில் "ஈரைங்குற்றம்’ எனச் சிலகுற்றங் கூறினார்; இவையும் இலக்கணமே கூறினன்' என்பார் எதிர்மறுத்துணரின் திறத்தவும் அவையே” என அக்குற்றங்களை எதிர்மறுத்துக் கொள்ளும் முறையில் நூற்குரிய குணங்கள் பத்தினையும் குறிப்பிற் புலப்பட வைத்தார். அக்குணங்களாவன கூறியது கூறாமையும், மாறுகொளக் கூறாமையும், குன்றக்கூறா மையும் முதலியனவாம். இம்மரபியற் சூத்திரப்பொருளை அடியொற்றிக் கூறும் முறையில் அமைந்தது,

  • சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல்,

நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத் தாதல், முறையின் வைப்பே உலகமலை யாமை, விழுமியது பயத்தல், விளங்குதாரணத்த தாகுதல் நூலிற் கழகெனும்பத்தே' (நன்னூல் - 13) எனவரும் சூத்திர மாகும்.