பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 岛翁勤 வழிப் பெரும்பான்மை சிறுபான்மை கொண்டு வகுத்துப் பொரு துளுரைத்தலுமாம். இன்னுமதனானே தொகைபடக் கூறியவதனை வகுத்துப் பொருளுரைத்தலுமாம். மொழிந்த பொருளோடொன்றவைத்த லாவது --சூத்தி ரத்துட்பொருள் பலபடத் தோன்றுமாயின் முற்பட்ட சூத்திரத் >- دسم திற்கொக்கும் பொருளு அன்றியும் முற்பட்ட சூத்திரத்தினான் ஒருபொருளோதிய வழிப் பிற்பட்ட சூத்திரமும் பொருளோடொன்றவைத்தலுமாம். மொழியா ததனை முட்டின்றி முடித்தலாவது-எடுத்தோ தாத பொருளை முட்டுப்படாமல் உரையினான் முடித்தல். இதனை உரையிற்கோடல் என்ப இக்கருத்தினானே, சூத்திரத் துட்பொருளன்றியும் யாப்புறவு இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே, (மரபியல்-கoரு) என ஒதுவராயிற்றென்க வாரா ததனான் வந்தது முடித்த லாவது-ஒருங்கெண் னப்பட்ட பொருளொன்றனைப் பகுத்துக் கூறியவழி ஆண்டு வாராத தற்கோதிய விலக்கணத்தை இதன் கண்ணும் வருவித் துணர்த்துதல். வந்ததுகொண்டு வாராதது முடித்தலாவது - ஒருங் கெண்ணப்பட்டவற்றுளொன்றைப் பகுத்து இலக்கணங் கூறிய வழி வாராததன்கண்ணும் இவ்விலக்கணத்தைக் கூட்டிமுடித்தல். முந்து மொழிந்ததன் தலைதடுமாற் றாவது - முற்பட அதிகரித்த பொருளை யவ்வகையினாற் கூறாது முறைபிறழக் கூறுதல். இவ்வாறு கூறுங்கால் ஒருயனோக்கிக் கூறல் வேண்டும். அது புள்ளிமயங்கியலுட் கண்டுகொள்க. ஒப்பக்கூறலென்பது - ஒரு பொருளெடுத்து இலக்கணங் கூறிய வழி அதுபோல்வனவற்றையு மிலக்கணத்தான் முடித்தல். ஒருதலைமொழியாவது-ஏகாக்கர மென்னும் வடமொழிப் பொருண்மை. அஃதாவது, சூத்திரத்திற்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனுளொன்றனைத் துணிந்து கூறல்.