பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 மரபியல் 'குற்றிய லுகரம் வல்லா று.ார்ந்து’’ (தொல் எழுத்-மொழி. 3) நிற்றல் வேண்டும் என்று கொள்ள வைத்தலும் போல்வன. இனி, வழக்கி பலும் செய்யுளியலும்பற்றி எழுத்து இலக்கணம் இயற்றமிழெனப் படும். அச்செய்யுளின் றி அமையாத இசையிலக்கணம் இசைத்தமிழெனப் பெயரேய்தி அல்வியற்றமிழ்ப் பின்னர் வைக் கப்பட்டதெனப்படும்; இவ்விரண்டன் வழி நிகழ்த்துங் கூத்திலக் கனங் கூறிய நாடகத் தமிழ் அவற்றுப் பின்னர்த்தாமென முறைமை கூறுதலும்; இனி இயற்றமிழுள்ளும் எழுத்ததிகாரத் தோடு சொல்லதிகாரத்திற்குஞ் சொல்லதிகாரத்தோடு பொருளதி காரத்திற்கும் இயையு கூறுதலும் அதிகாரத்துள் ஒத்துப்பலவாக லின் அவை ஒன்றன் பின்னொன்று வைத்தற்கு இயைபு கூறுதலும் அவ்வாறே சூத்திரத்திற்கு இயைபு கூறுதலுமெல்லாம் அதிகார முறைமைக்கு இன மென்று சேர்த்தியுணரப்படும். பிறவும் அன்ன வழக்கிய லாற் செய்யப்பட்ட மை யென்னையெனின், முறை கிழமையெனவுங் கொள்ளப் படும். அவற்றுள், ஈண்டு அதிகாரமென்றொழியாது முறைமை யெனவுங் கூறினமையின் அதிகாரமென்பது முறைமைப்பொருட் டன்றி முன் ஓரிடத்து நிறுத்தி அதன் வழிமுறையாற் பொருள் கோடல் கொள்க; என்னை முன்னும் பின்னும் நின்ற சூத்திரம் இரண்டனையும் ஒரிடத்தனவாகக் கருதல் வேண்டும்; அங்ங்னங் கருதவியைபுகொண்டன்றி ஒன்றன் பொருண்மை ஒன்றற்கு வரு வித்தல் அரிதாகலானும் அங்ங்ணம் இடம் பற்றாக்கால் ஒருவன் செய்த நூலோடு பிறிதொரு நூற்கு இயைபு கூறாதவாறுபோல எழுத்ததிகாரத்தோடு சொல்லதிகாரத்திடை இயைபு கூறல்வேண்டு வதன்றாவான் செல்லுமாதலானுமென்பது. எனவே, இடமெனப் பட்டதுதானே முறைமைப் பொருளும் படுமாயினும் இச்சூத்திரத் துள் அதிகாரமெனவும் முறைமையெனவுங் கூறினமையின் ஈண்டு இடமுறைமை யென்பதே கருத்தாயிற்று. இதனானே உடன் பிறந்தாருள் ஒருவற்குரியது வழித்தோன்றினார்க்கும் ஒருவழி உரியவாறுபோல முன்னர் நின்ற விதி பின்னர் வந்ததற்கும் வேண்டியவழிக் கொள்ளப்படுமென்பது உத்திவகையாயிற்று. میسر இனியொருசாரார், இங்ங்னம் வரைந்துகொண்ட இடத் துள்ளே யாற்றொழுக்குப் போலவன்றி இடையிடையும் பெறு