பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 213 என்றவழி, ஒன்றாதது இயற்சீர்வெண்-ளை யென்றுகோடல் அருத்தாபத்தியாகி, 'எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்து' (தொல்-செய் : 61) o என்ற வழக்கியலானே வழுவன்றி அடங்குமென்பது. (8) வாராததனான் வந்தது முடித்தல் -ஒரு பொருண் மைக்குவேண்டும் இலக்கணம் நிரம்ப வாராததோர் சூத்திரத் தானே அங்ஙனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு கொள்ளச்செய்தல்; அது, 'தொடர விறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாகலு முரித்தே' (தொல்-எழுத்-உயிர் : 1.2) என அதற்குக் கேடு வாராத சூத்திரத்தானே லகரம் றகர வொற்றாய் வருமெனப் பிரித்துத் திரிபு கூறியதே பற்றாக லகரம் ஆண்டு நில்லாது கெடுமென்று கொள்ளவைத்ததனானே சிற்சில வித்திப் பற்பல கொண்டாரென்று வந்த புணர்ச்சி முடித்த வாறு கண்டுகொள்க. "எல்லா மென்னு மிறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும்’ (தொல்-எழுத்-உரு 17) என்றவழி, எல்லாமென்னும் விரவுப்பெயருள் உயர்தினை கூறி வற்றுச்சாரியை பெறாமையான் அது பெற்றுவந்த அஃறிணைக் கூறே முடித்தலும் அது பிறவும் அன்ன. இனி, இங்ங்னம் முடிபுகோடலன்றி ஆண்டுக் குறியிடு தலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்குநிகழ்ந்தது பின்னர் ஆட்சிக் கண் வாராமையும் வந்தவழிப் பிறவற்றோடு கூறுதலும் அதற்கு இனமெனப்படும் அவை, 'அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி' (தொல்-சொல்-வினை 31) என முடிந்ததனை மீண்டும், 'நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி' (தொல்-சொல்-எச்ச :34)