பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮懿 தொல்காப்பியம்

  • பிணந்தின் பெண்டிர்க்குக் குருளை காட்டிப் புறங்காட் டோரி புலவுத்தசை பெறுாஉம்'

எனவரும். நாடினர் கொளினே யென்றதனானே' வெயிலாடு முசுவின் குருளை யுருட்டுங் குன்ற நாடன் கேண்மை’ - (குறுந் 38) என்றாற் போல முசுவிற்குங் குருளைப்பெயர் கொடுக்க. ஆய்வுரை : (இ-ள். குருளையென்னும் இவ்விளமைப்பெயரை ஆராய்ந்து மனங்கொள்ளுங்கால் நரியும் குருளையென வழங்கும் அத்தன்மை யதாகும் என்று. 'நாடினர் கொளின் நரியும் அற்றே என இயையும். அற்றுஅத்தன்மைத்து; குருளை என்னும் இளமைப்பெயரால் வழங்கும் அவ்வியல்பினையுடையது. மேலைச் சூத்திரத்தோடு ஒருங்கு கூறா மையால் நரிக்குருளை"யென வழங்குதல் சிறுபான்மை வழக்கெனக் கொள்வர் உரையாசிரியர். அற்று - அத்தன்மைத்து. (க) கo. குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார் இளம்பூரணம் : இச்சூத்திரம் என்னுதலிற்றோலெனின் எய்தாததெய்து வித்தல் நுதலிற்று. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட ஐவகையுயிர்க்குங் குட்டி பறழ் என்பனவும் ஆம் என்றவாறு. மேற்சொல்லப்பட்ட ஐவகையுயிர்கள் ஆவன நாய், பன்றி, புலி, முயல், நரி என்பன. இவற்றுக்குக் குருளை என்பதோடு குட்டி, பறழ் என்பனவும் இளமைப் பெயர்களாக வழங்கப்படும் என்பதாம். 1. நாடினர் கொளினே என்றதனால் முசுவிற்கும் குருளைப் பெயர் கொண்டார் பேராசிரியர்.