பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝18 தொல்காப்பியம் உடம்பொடுபுணர்த்துச் சொல்லுவன அதற்கு இன மெனப்படும். என்னை? விதியல்லாதது விதிபோல மற்றொரு வழிச் சேறலின். (11) தன்கோட்கூறல்-சொல்லாதன பிறவுள வாயினும் அந்நூற்கு வேண்டுவதே கொள்வலென்றல்; அது, 'அஃதிவ னுவலா தெழுந்துபுறத் திசைக்கு மெய்தெரி வளியிசை யளவுதுவன் றிசினே' (தொல்-எழுத்-பிறப் : 20) எனவும், ‘சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அஐஒளவெணு மூன்றலங் கடையே’ (தொல்-எழுத்-மொழி : 29) எனவும், 'குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே' (தொல்-எழுத்-மொழி : 11) எனவும், பாடலுட் பயின்றவை நாடுங் காலை' (தொல்-அகத் : 3) எனவும் வரும். இவ்வாற்றானே. 'அளபிற் கோட லந்தணர் மறைத்து’ (தொல்-எழுத்-பிறப் : 20) ஆயினும் அது கூறினேனெனவும், இயற்சொல்லிற்கல்லது நிலை மொழியாக்கங் கூறேனெனவும், ' வழக்குஞ் செய்யுளும் ஆராய்வல்' என்று புகுந்தான் பாடலுட் பயின்ற வழக்கே கூறுவலெனவுங் கூறுதலின் அவை தன்கோட்கூறுதலாம். இனி, ஒன்பது மயக்கத்துண் மெய்ம்மயக்கங்கூறி ஒழிந் தன கூறாமையும் வினைத்தொகையும் பண்புத்தொகையும் எடுத்தோதி முடியாமையும், ‘' நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்' (தொல்-அகத் : 53)